மூதாட்டி சிறுநீரகத்தில் இருந்து “எடுக்க-எடுக்க” கிடைத்த 47 கற்கள்!
Share

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவரது சிறுநீர்ப்பையிலிருந்த 47 கற்களை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி சாதனை செய்துள்ளனர்.47 gems found “take” elderly kidney
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விளங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளன் மனைவி உடையாள்(65). இவருக்குக் கடந்த 5 ஆண்டுகளாகச் சிறுநீர் பை வீங்கியிருந்ததால் சிறுநீர் முழுமையாக வெளியேறாத நிலையில் அவதியுற்று வந்தார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உடையாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது சிறுநீர்ப் பையில் கற்கள் அதிகமாக இருந்ததை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர்.
இதனையடுத்து முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யபட்டது. மருத்துவர் அறிவழகன்,நிலைய மருத்துவ அலுவலர் ஞானக்குமார் ஆகியோர் உடையாளுக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சையின் போது சிறுநீர் பையிலிருந்து சிறிதும் பெரிதுமான 47 கற்களை அகற்றி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.
இது தொடர்பாக சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் க.அறிவழகன் கூறுகையில் ”உடையாளுக்கு நரம்புத் தளர்ச்சியுடன் இணைந்து சிறுநீர்ப்பையில் கற்களும் சேர்ந்து மிகுந்த அவதிப்பட்டு வந்தார். அவரை பரிசோதிக்கும் போது சிறுநீர்ப்பையில் 25 மி.மீட்டர் அளவில் 4 கற்கள் உட்பட மொத்தம் 47 கற்கள் இருப்பது தெரிய வந்தது.
பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்து கற்கள் ஒவ்வொன்றையும் பொறுமையாக வெளியில் எடுத்தோம்.பொதுவாக முதியோர்கள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீர்ப்பையில் கற்கள் அதிகம் தங்காது.
உணவில் உப்பு மிகுந்த பொருட்களான கருவாடு,அப்பளம்,வடகம்,ஊறுகாய் போன்றவற்றை முதியோர்கள் தவிர்த்து விடுவது நல்லது.முக்கியமாகப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனக்குடன் வெளியேற்றி விட வேண்டும். அதிக தண்ணீரும் பருக வேண்டும்.
இதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்” என்றார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர்! – 1.2 கோடி ரூபாய் சம்பளம்!
- என் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்! – தீபா குற்றச்சாட்டு!
- சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – 99 வயது முதியவர் கைது!
- விழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு! (காணொளி)
- சிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்! – காரணம் என்ன?
- கமலின் சிகப்பு ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் கூட்டம்!
- திருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- மகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா!
- ஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு!
- ஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை!
- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை!
- இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! – இந்திய தூதரகம்!
- ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை! – உதவும் கரங்கள்!
- எங்களுக்கு உதவினால் ரூ.30 லட்சம் பரிசு..! – வாட்ஸ் ஆப் அதிரடி அறிவிப்பு!
- மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை!
- அன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை! – கன்னியாஸ்திரிகள் கைது!
- என்கவுன்டர் பயம்! – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி!
- ஓரினச்சேர்க்கை 377 குற்றம்! – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை!