Type to search

ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை! – உதவும் கரங்கள்!

India Top Story Tamil nadu

ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை! – உதவும் கரங்கள்!

Share

சென்னையில் வளர்ச்சியடையாத நுரையீரலுடன் போராடும் குறைமாதத்தில் பிறந்த 3 மாத குழந்தையை காப்பாற்ற பெற்றோர் போராடி வருகின்றனர்.3-month-old baby fights life ICU – help hands

ஒரு குழந்தையையும் பறிகொடுத்து விட்டு இப்பொழுது பிறந்த குழந்தையின் உயிரை காக்க போராடும் தந்தைக்கு உதவி செய்யுங்கள் எங்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ரொம்ப நாள் கழித்து எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தில் நாங்கள் இருந்தோம்.

கடவுள் அருளால் எங்களுக்கு இரட்டை குழந்தை உருவானார்கள். நானும் என் மனைவியும் நிறைய கனவுகளுடன் பெரிய பெரிய ஆசைகளுடனும் அவர்களை வரவேற்க ஆசையாக இருந்தோம் என்று பூர்ண குமார் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகைியல், ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நாட்கள் கூட நிலைக்கவில்லை. என் முதல் குழந்தை 5 மாதங்கள் கருப்பையில் வளரும் போதே இறந்து விட்டது. என் மனைவியால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அழுதாள், கத்தினாள். மனதளவில் ரொம்ப உடைந்து விட்டாள். வயிற்றில் வளரும் இன்னொரு குழந்தைக்காக அவளைத் தேற்றினேன்.

என் இரண்டாவது குழந்தையாவது நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அதே மாதிரி எனக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது என்கிறார். குழந்தை பிறந்ததும் பெற்றோர்களின் சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் அளவிட முடியாது. ஆனால் குமாரும் அவரது மனைவியும் தங்கள் 3 மாத குழந்தையை ஐ.சி.யுவில் வைத்துப் போராடி வருகிறார்கள்.

அவள் பிறக்கும் போது அவளது எடை வெறும் 660 கிராம் தான் உள்ளது. அவளது நுரையீரல் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. அவளால் சுயமாக சுவாசிக்க முடியாது. அவளுக்கு 24 மணி நேரமும் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை செய்து வருகின்றனர். நான்கு வாரங்களுக்கு அவள் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர். அவளின் சிகிச்சைகாக கிட்டத்தட்ட 20 லட்சம் வரை தேவைப்படுகிறது என்கிறார் பூர்ண குமார்.

தன்னுடைய முதல் குழந்தையை இழந்தது போல் இரண்டாவது குழந்தையையும் இழந்து விடக் கூடாது என்று பயத்துடன் போராடி வருகிறார் பூர்ண குமார். குமார் மற்றும் திவ்யா இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் மாத வருமானம் 60,000 ரூபாய் ஆகும். ஒரு கெளரவமான வருமானம் என்றாலும் லட்சக்கணக்கில் ஆகிக் கொண்டிருக்கிற மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

அவர்களின் குழந்தையின் சிகிச்சைக்காக ஏற்கனவே 32 லட்சம் வரை அவர்கள் செலவழித்து விட்டனர். அவர்களது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் தங்களால் முடிந்த உதவியை அளித்துவிட்டார்கள். ஆனால் இருந்தும் பணத்தை தேடி அவர்களின் ஓட்டம் நிற்கவில்லை. இப்பொழுது அவர்கள் நம்மிடம் நிதியுதவியை நாடி வந்துள்ளனர்.

என் மனைவியும் தற்போது குழந்தையை பார்த்துக் கொள்ள விடுமுறை எடுத்து கவனித்து வருகிறாள். என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதுக்குள் ஓடி வருகிறது. உண்மையில் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

“12 வருடங்கள் கழித்து நாங்கள் பெற்றோர்களாக ஆகியிருக்கோம். எங்களுக்கும் ஒரு குழந்தை. என்னை அப்பா என்று அழைக்க பிறந்த என் குழந்தை இப்படி ஏகப்பட்ட சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால் அது எல்லாம் இப்பொழுது கண்களில் கண்ணீராக நிற்கிறது.

அவளை காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் உங்களிடம் வந்துள்ளேன். எனக்கு உதவுங்கள். குமாரின் குழந்தையைக் காப்பாற்ற 20 லட்சம் வரை தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யலாம். ஒரு பெற்றோரின் சந்தோஷத்தை மீட்டுத் தந்த மனித நேயத்துடன் உதவுங்கள். உங்கள் சிறு உதவி ஒரு உயிர் காக்க இருக்கட்டும்.

NEFT/IMPS/RTGS transfer to the following account : (From Banks in India only)

Account name : Baby of Sri Divya

Account number : 700701707023539

IFSC code: YESB0CMSNOC

(The digit after B is Zero and the letter after N is O for Orange)

OR For :

UPI Transaction : [email protected]

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: