ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும்! – எஸ்.வி.சேகரை கண்டித்த நீதிபதி…!
Share

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், எஸ்.வி.சேகர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.must come proper hearing – Judge denounced S.V.sekar
பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்து ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கத்தினர், எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படை யில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் மீதான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் ஜுலை 5 அன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகர் ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் என்று கண்டித்த நீதிபதி, ஒழுங்காக விசாரணைக்கு வருவேன் என்று பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தருமாறு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் வருகின்ற 20ஆம் தேதி எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- விவசாயப் பொருள்களின் விலைகள் உயர்வு! – மோடி அரசின் அறிவிப்புகள்! (விவரம்)
- தள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி! – குமாரசாமி அறிவிப்பு!
- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்! – விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!
- சேலம் 8 வழிச்சாலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல்! (காணொளி)
- 6 வயது சிறுமியை வயல் காட்டுக்குள் கற்பழிக்கும்போது பிடிபட்ட இளைஞர்! (காணொளி)
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு செல்ல பைப் பொருத்தி தற்கொலை!
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- கடைக்குள் சென்ற இளம் பெண் மாயம்! – 100 நாட்களாக தேடுதல் வேட்டை!