Type to search

“ஊட்டி நகரை” தடைக்காலம் விதிக்க “தாய்லாந்துக்கு” என்ன சம்பந்தம்?

Tamil nadu

“ஊட்டி நகரை” தடைக்காலம் விதிக்க “தாய்லாந்துக்கு” என்ன சம்பந்தம்?

Share

ஊட்டி! இப்படி ஒரு முறை சொல்லிப்பாருங்களேன். மனதில் குளிரடிக்கும், மனம் குதூகலமாகி துள்ளாட்டம் போடும். என்னதான் பல வெளிநாடுகளில் சுற்றினாலும் ஊட்டி நமக்கு சம்திங் ஸ்பெஷல்தான்.relevance “thailand” impose “ooty city”

தமிழ்நாட்டில் பலரும் அங்கு போயிருப்பார்கள், இதுவரை செல்லாதவர்கள் ஊட்டி போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அந்த அளவு செல்லக்குட்டியான ஊட்டி நிஜத்தில் எப்படி இருக்கிறது?

மேட்டுப்பாளையம் வரை அதே வெக்கைதான். மேட்டுப்பாளயத்தைத் தாண்டி ஊட்டிக்கு இரண்டு வழிகள் உள்ளன. குன்னூர் வழி அல்லது கோத்தகிரி வழி. பெரும்பாலானவர்கள் குன்னூர் வழியிலேயே செல்வார்கள். கோத்தகிரி வழியில் சென்றால் 10-12 கிலோ மீட்டர் தூரம் அதிகம். ஆனால், சாலை அருமையாக இருக்கும்.

நம் குன்னூர் வழியிலேயே செல்வோம்.

மேட்டுப்பாளையம் முடிந்து ஊட்டி நோக்கி செல்கையிலேயே உற்சாகம் தொத்திக்கொள்ளும். இருபுறமும் தோப்புகள் வரிசை கட்டும். அதைத் தாண்டினால், மலையடிவாரத்தை அடைவோம். பிரிட்டிஷ் காலத்தில் போட்ட இரும்பு பாலம் வரும். அந்த இடத்தில் காடு ஆரம்பிக்கும். முதல்முறை செல்பவர்கள் இந்தப் பாலத்தைத் தாண்டியதும், முதல் இரவுக்குச் செல்லும் விர்ஜின் போல எக்ஸைட் ஆவார்கள். முதல் கொண்டை ஊசி வளைவு தென்படும். அதில் ஹோவென கத்திக்கொண்டே ஏறினால் பர்லியாறு என்ற இடம் வரும்.

இந்த இடத்தில் சில சிற்றுண்டிக்கடைகள் உண்டு. பேருந்துகள் இங்கே இளைப்பாறும். இந்த நிறுத்தம் வாந்தி பிரியர்களுக்கானது. மேலிருந்து இறங்குகையில், வாந்தி எடுத்தவர்கள், எடுக்கப்போகிறவர்கள் உல்லாசம் அனுபவிக்கும் இடம் இது. மேலே ஏறுபவர்களும் வாந்தி எடுக்க ஏதுவாக எண்ணெய்ப் பலகாரங்களை வெளுத்துக் கட்டும் இடமும் கூட,

relevance "thailand" impose "ooty city"

இதைத் தாண்டினால் கானகம் ஆரம்பித்து விடும். ஐந்தே நிமிடத்தில் நுரையீரல் நன்றி சொல்லி துள்ளாட்டம் போடும். காட்டின் பச்சை வாசனையை உணரலாம். சின்ன சின்ன நீரூற்றுகள், அடர் காடு , பள்ளத்தாக்குகள் என ஒன்றரைமணி நேரப் பயணத்தில் குன்னூர் வரும். இந்தப் பயணம் ஊட்டியைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கும்.

குன்னூர் ரயில் பாதையைக் கடந்து இன்னும் முன்னேறினால், பாய்ஸ் கம்பனி, அரவங்காடு என சின்ன சின்ன ஊர்களைக் கடந்து முன்னேறினால் காட்டின் நடுவே கான்கிரீட் பில்டிங்குகள் தென்பட ஆரம்பிக்கும். ஊட்டியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

இன்னும் கொஞ்சம் கடந்தால் பெரிய பெரிய ஹோர்டிங்குகள், பெரிய பெரிய கான்கிரீட் கட்டடங்கள், நெருக்கமான பில்டிங்குகள் ஆரம்பிக்கும். ஆமாம், ஊட்டிக்குள் நுழைந்து விட்டோம். ஊட்டியின் மெயின் கேட்வே சாரிங்க் கிராஸ். இதுதான் ஊட்டியின் ஜங்ஷன். இங்கே வந்து சேர்ந்ததும் இறங்கி பார்த்து விட்டு ஒரு டீ அடித்துவிட்டு மற்ற ஏரியாக்களைப் பார்க்கலாம்.

relevance "thailand" impose "ooty city"

செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டு, வளசரவாக்கம் சிக்னலில் இறக்கி விட்டால் எப்படி இருக்கும்? அப்டித்தான் இருக்கும் சேரிங் கிராஸ். எக்கச்சக்க கனவுகளுடன் வந்தவர்களுக்குப் பொசுக்கென ஆகி விடும்.

மனதை தேத்திக்கொண்டு டீ குடிக்கச் செல்வோம். ஊட்டி, தேயிலைத் தோட்டம் என என்னென்னவோ நினைத்துக்கொண்டு, செம டீயா இருக்கும் என டீ சொல்வோம். சுட வைத்த கழனி தண்ணி போல ஒரு டீ தருவார்கள். ஆம், நாம் இங்கே நகரத்தில் குடிக்கும் புளியங்கொட்டை, தவுடு, கலர்பொடி கலந்த அதே டீத்தூளைத்தான் அங்கும் பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்துதான் அங்கும் சப்ளை.

`சரி போ’ எனச் சமாதானப்படுத்திக்கொண்டு, டீயை உறிஞ்சிக்கொண்டே கீழே பார்த்தால் காலுக்கு அருகில் சாக்கடைத் தண்ணி ஓடும். குப்பைகள் பறந்துகொண்டு இருக்கும். நான்கைந்து சொறி நாய்கள் நோயுடன் வலம் வரும். ஒழுங்கில்லாமல் டிராஃபிக் ஜாம் ஆகி இருக்கும்.

relevance "thailand" impose "ooty city"

`அடக் கருமமே’ என இன்னும் கொஞ்சம் முன்னேறலாம் என முன்னேறினால், ரோட்டின் இருபுறமும் கொஞ்சமும் சுகாதாரம் இல்லாத சின்ன சின்ன கடைகள் தென்படும். மிகக் குறுகலான சாலையில், டிராஃபிக் தடுமாறி முன்னேறிக்கொண்டிருக்கும்.

ஏடிசி என்ற இடத்தை அடையலாம். இதற்குப் பக்கத்தில்தான் ஊட்டி மார்க்கெட் இருக்கிறது. இங்கும் அதே கதைதான். தெருவோரக் கடைகள் அடைத்துக்கொண்டிருக்கும். சற்றும் சுகாதாரம் இல்லாத உணவை, சாக்கடை நீர் கசிந்து ஓடிக்கொண்டிருக்கையில் கால் நனைத்துக்கொண்டே சாப்பிடலாம். மிகமிக அழுக்காக, குப்பையும் கூளமுமாக, சாக்கடை நீர் கசியும் இடமாக இந்த ஏடிசி விளங்கும்.

இங்கே இருந்துதான் கிராமங்களுக்குப் பேருந்துகள் கிளம்பும். மண்ணின் மைந்தர்களை இங்கே காணலாம். இந்த இடத்தில் மட்டும் பயணிகளின் வசதிக்காக 5 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன!

புறாக்கூண்டு லாட்ஜுகள் தென்படும். `ரூம் வேண்டுமா?’ எனப் பாசக்காரர்கள் அழைப்பார்கள்.

மூக்கைப் பிடித்துக்கொண்டு நகர்ந்து நகர்ந்து சென்றால் ஊட்டி மார்க்கெட் வரும். மார்க்கெட்டுக்கு வெளியிலேயே அதன் தன்மை தெரிந்து விடும். அதே மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம். இங்கிருந்து ஊட்டி பேருந்து நிலையம் வரை இதே சுகாதாரக் கேடு, குப்பைக் கூளங்கள், நெரிசல், டிராஃபிக் ஜாம்.

குப்பைக் கூடைகளும் மிகமிக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றும்தான். பார்க்கிங்க் பெரிய சவால்! ஏடிசி பேருந்து நிலையம் அருகே, ஒரு பள்ளி மைதானத்தில் தற்காலிக பார்க்கிங் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

ஊட்டி மக்கள் கட்டி இருக்கும் பெரும்பாலான வீடுகளில் கார் பார்க்கிங் கிடையாது. கார்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வராத காலத்துக்கு முன்பு கட்டிய வீடுகள். அதனால் அனைத்து கார்களும் சாலையோரம் பார்க் செய்யப்பட்டிருக்கின்றன. இதுவும் ஜாம் ஆவதற்கு ஒரு காரணம்.

டவுன் முழுக்கவே ரெஸ்ட் ரூம்கள் கண்டுபிடிப்பது சிரமம். ஒன்றிரண்டு பயோ டாய்லெட்கள் அமைத்திருக்கிறார்கள். இவை ஊட்டிக்கு வரும் கூட்டத்துக்குக் கொஞ்சம் கூட பத்தாது. ஊட்டி முழுக்க சுகாதாரமற்ற உணவகங்கள் சின்னதும் பெரிதுமாகப் பெருகிக் கிடக்கின்றன.

relevance "thailand" impose "ooty city"

டவுனை விட்டு வெளியேறி இரண்டு மூன்று கிலோ மீட்டர் சென்றாலே கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கிறது. ஊட்டி – முதுமலை ரூட், ஊட்டி – பைக்காரா ரூட், ஊட்டி – லவ்டேல் ரூட், ஊட்டி – கோத்தகிரி ரூட், இங்கெல்லாம் சென்றால் சுற்றுப்புறம் மாசடையாமல் பச்சைப்பசேலென காடுகளும் சுத்தமாக இருக்கிறது.

ஊட்டியை என்ஜாய் செய்ய ஊட்டியை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. டவுனுக்குள்தான் குளிர் வெளுத்து வாங்குகிறது. அவுட்டரில் குளிர் இருந்தாலும் ஊட்டி டவுன் அளவுக்கு இல்லை. ஆனால், அந்த டவுனைத்தான் நாசமாக்கி வைத்திருக்கிறது நகராட்சி.

ஊட்டி நகராட்சி செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. தாய்லாந்து பீச்களை அவ்வப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தடை போட்டு புனரமைப்பார்கள். இப்போது கூட தடை உள்ளது என நினைக்கிறேன். அதைப்போல, ஊட்டிக்கும் சுற்றுலா செல்ல 6 மாதங்கள் தடை என அறிவித்து, ஊட்டி டவுனை ஸ்பெஷல் ப்ராஜக்ட் மூலம் அடியோடு மாற்றி புனரமைக்க வேண்டும்.

நல்ல சாலைகள், நடைபாதைகள், பார்க்கிங், சாக்கடை மேனேஜ்மென்ட், தரமான உணவகங்கள் என உருவாக்கி இயற்கையிலேயே மலையின் ராணியாகிய ஊட்டியை, மகாராணியாக்கி அழகு பார்க்க வேண்டும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: