திருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்!
Share

{ husband give gift wife }
ஆவடி அருகே உள்ள பட்டாபிராமை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மதுமிதா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துவந்த இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்ட, சந்தோஷமாக வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் அரங்கேறியது. ஆசை ஆசையாய் அரங்கேறிய இந்த காதலும், திருமணமும் ஒரே ஆண்டில் காலாவதியானது வேதனை.
திருமணமாகி 1 ஆண்டு நிறைவு பெற்ற காதல் மனைவிக்கு முதலாமாண்டு திருமண பரிசாக காத்துக்கொண்டிருந்தது மரணம். மதுமிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். ஆனால் வெங்கடேசன் எந்த வேலைக்கும் செல்லாமல், நினைத்தால் வேலைக்கு செல்வது பின் திடீரென வேலையிலிருந்து நின்று விடுவது. மற்ற நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித்திரிந்து வந்தார்.
மேலும், திருமண நாளான நேற்று மதுமிதா காய்கறி அறிந்து சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது மதுமிதாவுக்கும் வெங்கடேசனுக்கும் இடையே கருத்து மோதல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே, காய்கறி அறிந்துக்கொண்டிருந்த கத்தியை எடுத்து மதுமிதா வயிற்றில் 3 முறை குத்தினார். உடனே மயங்கி விழுந்த மதுமிதா ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் ஆசை மனைவியை கொலை செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு மயங்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு, அக்கம்பத்தினர் வந்து பார்த்தபோது, மதுமிதாவும், வெங்கடேசனும் உயிர் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டாபிராம் காவல்துறையினர், மதுமிதா மற்றும் வெங்கடேசனை மீட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே மதுமிதாவின் உயிர் பிரிந்தது.
வெங்கடேசன் ஆவடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தையில் தொடங்கிய காதல் கருத்துவேறுபாடு என்ற சிறைக்குள் அடைக்கப்பட்டு, 1 வருடத்தில் மரணத்தை தழுவியது. திருமண நாளிலே காதலும், காதல் ஜோடியும் அழிக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆசையாய் காதலித்த மனைவியை கணவனே கொலை செய்ததை பார்க்கும்போது இன்றைய காதலின் பெறுமதி 1 வருடங்கள் தானோ என சிந்திக்கவைக்கின்றது.
Tags: husband give gift wife
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- வதந்திகளால் தொடரும் வன்முறைகள்: வாட்ஸ்ஆப்புக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
- வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!
- காவல்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவலர் ராஜவேலுவின் குடும்பத்தினர் கோரிக்கை!
- 51 இந்து கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்!
- காவலரைத் தாக்கிய “ரவுடி ஆனந்தன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
- இயக்குநர் திவ்ய பாரதியை கைது செய்ய முயற்சி! – த.மு.எ.ச கடும் கண்டனம்!
- காஞ்சிபுரம் பெருமாள் கோவிலுக்குள் அடித்துக் கொள்ளும் ஐயர்கள்! (காணொளி)
- எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய்!
- நெஞ்சை நிமித்தி தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு!