நெஞ்சை நிமித்தி தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு!
Share
சென்னை ராயப்பேட்டையில் தகராறு நடக்கும் இடத்துக்கு தனி ஒருவனாகச் சென்ற காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.rowdy 18 cuts – one man army policeman
சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் கால் வந்தது. அதில் பேசியவர், `ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகில் உள்ள பகுதியில் சில ரவுடிகள் மது அருந்திக்கொண்டு அவ்வழியாகச் செல்பவர்களிடம் தகராறு செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று கூறினார். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் ராஜவேலுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றார். அப்போது, அங்கு சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி ராஜவேலு கூறியுள்ளார். அப்போது, தனியாக சிக்கிக்கொண்ட காவலர் ராஜவேலுவை மது அருந்தியவர்கள் தாக்கினர். அவர்களுடன் ராஜவேலு, தனியொருவனாகப் போராடினார். ஆத்திரமடைந்த அந்தக்கும்பல் அரிவாள், கத்தியால் ராஜவேலுவை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அந்தக்கும்பல் ஆட்டோவில் தப்பியது.
இந்நிலையில் உயிருக்குப் போராடிய ராஜவேலுவை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜவேலுவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன.
மேலும் அவரின் இடது காது, கன்னத்தில் தலா ஒரு வெட்டுக்காயம் உள்ளது. ராஜவேலுவைத் தாக்கியவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அவர்கள், ராயப்பேட்டை காவல் நிலைய ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் உள்ள அரவிந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ராஜவேலுவைத் தாக்கிய அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன் உள்பட 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- சிறுவனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த கொடூரன்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- 6 வருடம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு “பாலியல் பலாத்கார வழக்கு” போட்ட பெண்!
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!