கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் குவியல் குவியலாக “வெடிகுண்டுகள்” – “தோட்டாக்கள்”
Share

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பாழடைந்த கிணற்றை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.bombs – bullets gummidipoondi SIPCOT
இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஜென்சன், பாபு ஆகிய இருவர் 2008ம் ஆண்டு கிணற்றில் குளித்தபோது காலில் தட்டுபட்ட மூட்டை ஒன்றை மேலே கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்தபோது துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. விவரம் அறியாத அந்த சிறுவர்கள் தோட்டாக்களை கல்லால் வைத்து உடைத்தபோது இருவரது உடல்களிலும் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து, கிணற்றில் இருந்து டன் கணக்கில் குவியல் குவியலாக துப்பாக்கி தோட்டாக்கள் வெடிகுண்டுகளை மீட்டது காவல்துறை. பழைய இரும்பு பொருட்கள் என்ற போர்வையில் இவற்றை இறக்குமதி செய்த சிப்காட்டில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையின் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெற்றார். இந்த தடையானது கடந்த வாரம்தான் நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதேசமயம், வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும், வெட்டவெளியில் பாதுகாப்பின்றி முட்புதரில் கேட்பாரின்றி இந்த ஆபத்தான ஆயுதங்கள் கிடப்பதாக கூறப்படுகிறது. இந்த தோட்டாக்களில் பல பயன்படுத்தக்கூடியவை என்றும் இதனை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம் என்றும் 2008ம் ஆண்டே வெடிகுண்டு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
ஆனால், பாதுகாப்பின்றி கிடக்கும் இந்த ஆயுதங்களால் ஆபத்தே ஏதேனும் ஏற்படும் முன்பே, அதனை செயலிழக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது! – உச்ச நீதிமன்றம்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!
- இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்! – சத்யா ஸ்ரீ சர்மிளா! (வீடியோ)
- “பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!
- 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் பிளேடால் கழுத்தை அறுத்ததால் பதற்றம்!(காணொளி)