பிக்பாஸ் மேடையில் கமலஹாசன் மனம் உருகி வேதனை!
Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் பாலாஜிக்கு தனது குடும்பத்தை உதாரணமாக காட்டி கமல்ஹாசன் சில யோசனைகளை வழங்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.kamal hassan migrates bigboss platform
பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் பங்கேற்பாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து கமல்ஹாசன் பங்கேற்பாளர்களுடன் அகம் டி.வி வழியாக கலந்துரையாடினார்.
அதில் மும்தாஜ் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த மைக்கை கழற்றிவிட்டு பிக்பாஸுக்கு நிபந்தனை வைத்ததால் அதை விதிமீறல் என குறிப்பிட்ட கமல்ஹாசன் அவரை கார்டன் ஏரியாவிற்கு போகச் சொல்லி தனிமைப்படுத்தினார். மேலும் பிக்பாஸ் சொல்லும்வரை மைக்கை அணியக்கூடாது என அவருக்கு கட்டளையிடப்பட்டது.
இதையடுத்து பாலாஜி – நித்யா பிரச்னைக்கு வந்த கமல்ஹாசன், நித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டிய பாலாஜியை கண்டித்தார். ஒரு கட்டத்தில், கமல்ஹாசன் இங்கு இருந்தாலும் கோபம் வந்தால் என் எதிர்ப்பை பதிவு செய்வேன் என பாலாஜி கூறினார்.
இதைத்தொடர்ந்து பாலாஜிக்கான குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. குறும்படத்தைக் கண்ட பாலாஜியிடம் நித்யாவை பிக்பாஸ் வீட்டிலிருந்து விரட்ட திட்டம் எதுவும் வைத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினார் கமல்ஹாசன். இதற்கு பதிலளித்த பாலாஜி தனது குடும்பக் கதையை கமல்ஹாசனிடம் சொல்ல முயன்றார்.
இடைமறித்த கமல்ஹாசன் ஒரு உறவு இருக்கும்போது கொடுக்கும் உரிமையை, பிரிந்த பிறகும் கொடுக்க வேண்டும் என பாலாஜியிடம் கூறினார். மேலும் இதயமே வெடிக்கும் அளவு தனது குடும்பத்தில் பிரிவு வந்த போதும் நான் அவர்களை ஒருபோதும் தவறாக பேசவில்லை எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மட்டும் பார்க்கவில்லை. உங்களது மகளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் அதை கருத்தில் கொள்ளுங்கள் எனவும் பாலாஜியிடம் கூறினார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- திருடன் என நினைத்து அடித்தே கொன்ற காசிமேடு மக்கள்!
- கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி! – பொதுமக்கள் அச்சம்!
- தமிழர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க திடீர் தடை!
- நடிகர் விஜயுடன் கூட்டணி! – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!
- “நாங்கள் இப்படித்தான்” – திருநங்கைகளின் ரிப்போர்ட்!