பகை தீர்க்க, குதிரையின் கழுத்தை அறுத்து கொடூரம்!
Share

சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். திருமணத்தின்போது, மணமக்களை அழைத்துச் செல்லும் சேரியட் வண்டியை வைத்து இவர் தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக, ஸ்டீபன், விசாலி எனும் பெயர்கள் கொண்ட இரண்டு குதிரைகளை ராஜேஷ் வளர்த்து வருகிறார்.horse horror cut neck knife chennai
இதே பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர் சிறைக்குச் செல்ல ராஜேஷ் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த கோகுல், ராஜேஷைத் தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். ராஜேஷ் வீட்டில் இல்லாத நிலையில், கோகுலும், அவருடன் வந்த 4 பேருமாகச் சேர்ந்து வீட்டிலிருந்த குதிரையின் கழுத்தை அறுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ராஜேஷ், குதிரையை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல், குதிரைகளை பார்த்து வந்ததாக கூறும் ராஜேஷின் மனைவி செல்வி, குதிரையின் கழுத்தை அறுத்தவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கால்நடைகளை கொடுமை படுத்துவோரை இந்திய தண்டனை சட்டம் 429-ன் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறையில் தள்ள முடியும் என தெரிவிக்கும் ப்ளு கிராஸ் அமைப்பு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
கழுத்தறுபட்ட குதிரைக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாகக் கூறும் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், குதிரை தற்போது குணமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், குதிரையின் கழுத்தை அறுத்த கோகுல் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- வெளிவந்த மன்சூர் அலிகான்! – மரண கலாய்! (காணொளி)
- ஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்! (காணொளி)
- கோவையில் கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி இளைஞர் பலி!
- சுவீஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 50% அதிகரிப்பு!
- ஸ்டெர்லைட்டை மூடுவது தற்கொலையாம்! – போலிச் சாமியார் ஜக்கி அலறல்!
- தம்பியை ஓட… ஓட… நடுரோட்டில் விரட்டி குத்தி கொன்ற அண்ணன்!
- பல்பு திருடி! பல்பு வாங்கிய கோவை கொள்ளையன்!
- மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு!
- நடிகர் சங்க பணம் கையாடல்! – சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு!
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!