அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு கண்டுள்ளது!
Share

{value Indian Rupee }
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயாக சரிந்துள்ளது. இது வர்த்தகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் அமெரிக்க டாலர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருக்கின்றது என்று கூறப்படுகின்றது.
2016-ம் ஆண்டு நவம்பர் 24-ம் திகதி இந்திய ரூபாயின் மதிப்பு 68.73 ரூபாயாக இருந்தது. இந்த அளவுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்தபட்ச அளவாக இருந்தது. இன்று அதைவிட குறைந்து 68.89 ரூபாய்க்கு வந்துள்ளது.
நேற்று, 68.61 ரூபாயாக இருந்த நிலையில், 37 காசுகள் குறைந்து 68.69 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த தொழில்துறை வல்லுநர்கள், `இந்த விவகாரத்தில் ஆர்.பி.ஐ தலையிட்டு பணத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டும். தற்போதைய நிலை தொடரும் பட்சத்தில் பணத்தின் மதிப்பு 70 ரூபாய்க்கு மேல் செல்லும் அபாயம் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இந்தியாவில் நிரந்தர முதலீடு குறைவது, மோசமான உள்நாட்டுப் பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
Tags: value Indian Rupee
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!