மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள்! – கண்ணீர் வேண்டுதல்!
Share

மும்பையில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர் திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.
வட் பூர்ணிமா :
வட மாநிலங்களில் வட் பூர்ணிமா என்ற பண்டிகை மிகவும் பிரபலம். அன்றைய நாளில், திருமணமான பெண்கள் விரதமிருந்து, தங்களது கணவர்கள் நலமுடன் வாழவும், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டி கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள்.
நேற்று (ஜூன் 27) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள கோயில் ஒன்றில், கணவருக்காக பெண்கள் விரதமிருந்து மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினர்.
கோஷம் :
மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அதே மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து கயிறு கட்டினர். மேலும் சுற்றி வரும் போது, ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே மனைவியாக வந்துவிடக்கூடாது என கோஷம் போட்டபடி வந்தனர்.
இறப்பதே மேல் :
இது தொடர்பாக மனைவிகளால் பாதிக்கப்பட்டோருக்கான நலச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சட்டத்தை தவறாக பயன்படுத்தி எங்களது மனைவிகள் மோசமாக துன்புறுத்தியதாக கூறினார்.
மற்றொருவர் கூறுகையில், எனது மனைவி அளித்த பொய் புகார் காரணமாக எனக்கு 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றார்.
இன்னொரு நபர் கூறியதாவது: எனது உணவையும், எனது பணியையும் நானே செய்து கொள்வதால் எனக்கு மனைவி தேவையில்லை. அவரால் எனது வேலை போய்விட்டது. அவரது முகத்தை பார்ப்பதை விட இறப்பதே மேல் என்றார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பல்பு திருடி! பல்பு வாங்கிய கோவை கொள்ளையன்!
- மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு!
- நடிகர் சங்க பணம் கையாடல்! – சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு!
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!