ரஜினிகாந்த் “மக்கள் மன்ற கட்சியின்” நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு!
Share

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.Rajinikanth new control “People’s Party” executives!
இதன் படி, பேனர், போஸ்டர், கட்அவுட், நோட்டீஸ், சுவரொட்டிகள், செய்திதாள் விளம்பரம் ஆகியவற்றில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் புகைப்படத்தை வலது புறம் பெரிதாகவும், ரஜினி மக்கள் மன்ற முத்திரை தெளிவாக இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த நிகழ்ச்சிகளிலும் மாநில நிர்வாகிகளின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டாம் என்றும், பெயர்கள் மட்டும் போதுமானது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். என்றும், பேனர் அளவை பொறுத்து கவுரவ, இணை, துணைச்செயலாளர்கள், சார்பு அமைப்பு செயலாளர்கள் படம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மண்டல, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படம், மாவட்ட பொறுப்பாளர், செயலாளர் படங்களை விட சிறிதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொடூரமாக கொலை!
- உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி! – அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு!
- இதற்கு மட்டும் பணம் இருக்கிறதா? – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி?
- 17 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
- பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு! – புள்ளி விபரங்களுடன் முதல்வர் பதிலடி!
- “இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்!
- பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள்!