பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு! – புள்ளி விபரங்களுடன் முதல்வர் பதிலடி!
Share

தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை என்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புள்ளி விபரங்களுடன் பதில் அளித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் கொலை கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.details explanation chief minister edapaadi
தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை எனவும் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். இது தொடர்பாக முதலமைச்சரின் பதில் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் முதலமைச்சர் தமிழக காவல்துறை சார்பாக கொள்கை விளக்கக் குறிப்பு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 5,46,289 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் வழிப்பறி சம்பவங்களைப் பொருத்த வரை 2015ஆம் ஆண்டு ஆயிரத்து 763 வழக்குகளும், 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 680 வழக்குகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 850 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டு சம்பவங்களில் 2015ஆம் ஆண்டு 11,196 வழக்குகளும், 2016ஆம் ஆண்டு 12 ஆயிரத்து 128 வழக்குகளும், 2017ஆம் ஆண்டு 15,422 வழக்குகள் பதிவாகி உள்ளன எனத் தெரிவித்தார்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்து தொடர்பாக 2,06,052 வழக்குகள் பதிவாகி உள்ளன என்றும் இந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 49017 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் கும்பலாக சேர்ந்து கொள்ளையடித்தது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளைவிட 54 வழக்குகள் அதிகமாகி உள்ளதாகவும் கடந்தாண்டில் மட்டும் 59,679 இதர குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டைவிட நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாலியல் தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
குற்ற வழக்குகள் எண்ணிக்கை விவரம் :
வழக்குகள் 2015 2016 2017
வழிப்பறி 1,763 1,680 1,850
திருட்டு 11,196 12,128 15,422
சாலை விபத்து 69,059 71,431 65,562
சாலை விபத்து மரணம் 15,642 17,218 16,157
கூட்டுக் கொள்ளை 80 83 134
இதர குற்றங்கள் 59,177 55,510 59,679
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- “இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்!
- பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள்!
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- மனைவியை ரசித்த வேலைக்காரன்! – அவனை கொன்று செல்ஃபீ எடுத்த வீட்டுக்காரன்!
- கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!
- மனைவிக்காக இரண்டு மகன்களை கொன்ற கணவன்!
- திருடுனா…! புது பைக்கைதான் திருடுவேன்! – கொள்கை கொள்ளையன்!
- பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்!
- நான்கு பிள்ளைகளால் விஷம் குடித்த வயதான தம்பதி!
- இளைஞர்களை மிஞ்சிய 95 வயது தமிழ்நாட்டு கட்டு மஸ்தான்கள்!
- தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- கள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)