இரண்டு மாவட்டம் மக்களை கலக்கிய “தம்பதி கொள்ளையர்” கைது!
Share

நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பூட்டிய வீடுகளை உடைத்து தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன்- மனைவியைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 194 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.two district people arrested couple thieves
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை உடைத்து ஒரு கும்பல் திருடி வந்தது. பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளை உடைத்து திருடும் அந்தக் கும்பல் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தார்கள்.
நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள வீடுகளிலும் அந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டி வந்ததால் இரு மாவட்ட போலீஸாரும் அந்தக் கும்பலைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்காசியை அடுத்த சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்துப்பாண்டி என்பவர் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றார்.
இதேபோல பல இடங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் நடந்ததாலும், பூட்டிய வீடுகளைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாலும் சொக்கம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
தனிப்படை போலீஸார் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, கள்ளம்புளி பகுதியைச் சேர்ந்த ரவிகார்த்தி என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் தற்போது டி.என்.புதுக்குடியில் வசிப்பது தெரியவந்தது. அத்துடன், சொக்கம்பட்டியில் மாரிமுத்துப்பாண்டி என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட விவரமும் தெரியவந்தது.
ரவிகார்த்தி மற்றும் அவரின் மனைவி பிரியங்கா ஆகிய இருவரும் நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் இருவரும் குடியிருக்க வீடு தேடுவதுபோல பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளனர். பின்னர், பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த விவரம் தெரிய வந்துள்ளது.
அவர்களிடம் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான 194 சவரன் நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினார்கள். இருவரும் சேர்ந்து 14 காவல்நிலைய எல்லைக்குள் உள்ள வீடுகளை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீஸார் கைப்பற்றினார்கள். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சென்னை திரும்பிய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!
- ரூ.9,000 கோடியை அடைக்க தயார்! – “விஜய் மல்லையா”
- திருடுனா…! புது பைக்கைதான் திருடுவேன்! – கொள்கை கொள்ளையன்!
- பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்!
- நான்கு பிள்ளைகளால் விஷம் குடித்த வயதான தம்பதி!
- இளைஞர்களை மிஞ்சிய 95 வயது தமிழ்நாட்டு கட்டு மஸ்தான்கள்!
- தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!
- தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- கள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர்! – தலித் என்பதால் அடி உதை!
- கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!