நான்கு பிள்ளைகளால் விஷம் குடித்த வயதான தம்பதி!
Share

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே சு.நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். 75 வயதான கூலி தொழிலாளியான இவருக்கு 67 வயதான இருசம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முனியம்மாள் (47), நல்லான்கன்னி (43), சாவித்திரி (40) ஆகிய 3 மகள்களும், பஞ்சமூர்த்தி (45) என்ற மகனும் உள்ளனர்.elderly couple four children poisoned
இவர்கள் அனைவருக்கும் ராமன் திருமணம் நடத்தி வைத்துள்ளார். நான்கு பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராமன், இருசம்மாள் ஆகியோரை அவர்களது மகள்கள் மற்றும் மகன் வந்து பார்ப்பதில்லை. இவர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் கவனிப்பதில்லை. யாரும் கவனிக்காத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.
இதனால் ராமனும், இருசம்மாளும் மனமுடைந்து காணப்பட்டனர். அக்கம் பக்கத்தில் நாலு பிள்ளைகல்ல ஒருத்தருக்குகூட கஞ்சி ஊத்த மனசு வரலன்னு சொல்லி கவலைப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த விஷத்தை (பூச்சிமருந்து) எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தனர்.
இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது இவர்கள் அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளது. உடனடியாக அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- முதல்வரின் அணை பாதுகாப்பு மசோதா! – எதிர்க்கட்சியினர் வரவேற்பு!
- இளைஞர்களை மிஞ்சிய 95 வயது தமிழ்நாட்டு கட்டு மஸ்தான்கள்!
- தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!
- “தரையில் படுத்து” “ஒப்பாரி வைத்து” எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள்!
- தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- கள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- ஜெயலலிதா நினைவிடம் உறுதியா? இல்லையா? தமிழக அரசு பதில்!
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர்! – தலித் என்பதால் அடி உதை!
- கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!