முத்ரா திட்டம் தொடர்பாக வதந்தி! – ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்!
Share

ராமநாதபுரத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்யப்படும் என விஷமிகள் சிலர் பரப்பிய வதந்தியை நம்பி ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.rumor mudra plan – people collectorate office!
குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 10 லட்சத்துக்கும் குறைவாக கடன் தேவைப்படுவோருக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் தற்போது கடன் வழங்கப்படுகிறது என்றும் வழங்கப்படும் கடன் தொகை, வரும் டிசம்பர் மாதத்துக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விஷமிகள் சிலர் வதந்தியை பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனை நம்பி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் படையெடுத்தனர். குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் நடராஜன், அவர்களுக்கு விளக்கம் அளித்து, திருப்பி அனுப்பினார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- உயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை!
- இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!
- கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- தமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி! உதை!