கல்வீசி காவலர் கொடூரமாக கொலை! – மர்ப நபர்கள் வெறிச்செயல்!
Share

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் முதுநிலைக் காவலராக பணியாற்றி வந்த காவலர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.calvary police brutally murdered! – warm people
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதிகை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் முதுநிலைக் காவலராக பணியாற்றி வந்தார். ஓட்டேரி காவல்நிலையத்தில் வேலை செய்துவந்த இவர், ஒரு மாதத்துக்கு முன்பு பணிமாறுதல் காரணமாக சுங்குவார்சத்திரத்துக்கு மாற்றப்பட்டார். விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு மீண்டும் பணிக்காக காவல்நிலையம் வந்துகொண்டிருந்தார் மோகன்ராஜ். ஆனால், அவர் காவல்நிலையம் வரவே இல்லை. இரவுப் பணியில் ரிப்போர்ட் காவல்நிலையத்துக்கு கொடுக்காததால், விடுமுறையில் இருந்ததாக நினைத்து சுங்குவார்சத்திரம் காவல்நிலைய காவலர்கள் அவரைத் தேடவில்லை.
இந்த நிலையில், மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்துக்கு கிடைத்தது. மோகன்ராஜின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அப்போது அவர் சீருடை அணியாமல் இருந்திருக்கிறார். அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகன்ராஜுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கொலை செய்யப்பட்ட இடம் தனியார் பள்ளிக்குச் சொந்தமானது. அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கிவந்து அந்தப் பள்ளிக்கட்டடம் அருகே சிலர் மது அருந்துவார்கள். அப்போது அவர்களுடன் சேர்ந்து மோகன்ராஜ் மது அருந்தியிருக்கலாம். அப்போது ஏற்பட்ட தகறாரில் மோகன்ராஜ் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது மது அருந்துபவர்களைத் தட்டிக்கேட்டபோது கொல்லப்பட்டிருக்கலாம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!
- வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- தமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி! உதை!
- அரசாங்கத்தின் கடமை தியாகமல்ல! – பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசன்!
- ஃபேஸ்புக் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!
- “தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!
- ஆபாச படத்தால் தாக்கப்பட்ட கேரளா மாடல் அழகி “கிலு ஜோசப்”
- ஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு!
- ஆளுநருக்கு எதிராக போராடினால் ஏழாண்டு சிறை!(காணொளி)
- 8 வழிச்சாலை மிகவும் அவசியம்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- இன்று தமிழக சட்டப்பேரவையில் புயல் வீசும் என எதிர்பார்ப்பு!
- 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!
- “தமிழிசைக்கும்” “அன்புமணி ராமதாஸுக்கும்” ட்விட்டரில் நடந்த வார்த்தைப்போர்!
- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் முழுமையாக அகற்றம்!