8 வழிச்சாலை மிகவும் அவசியம்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
Share

நாட்டின் வளர்ச்சிக்கு, பசுமை வழிச்சாலை அவசியம்,” என, சேலத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.8 pavilion necessary! – chief minister edappadi palinasamy!
நேற்று அவர் அளித்த பேட்டி :
சென்னை – சேலம், எட்டு வழிச்சாலைக்கு, தர்மபுரியில், 56 கி.மீ.,க்கு எல்லைக்கல் நடப்பட்டு உள்ளது. சேலத்தில், 30 கி.மீ.,க்கு நடப்பட்டுள்ளது.
வழங்கியுள்ளனர் :
இன்னும், 6, கி.மீ., நடப்பட வேண்டும். 100க்கு, நான்கு பேர் மட்டுமே, நிலத்தை வழங்க மறுக்கின்றனர்.பலர், தாங்களாகவே முன் வந்து, நிலத்தை வழங்கியுள்ளனர்.
கடந்த, 2006ல் அமைக்கப்பட்ட, பெங்களூரு – சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும், 2009ல், உளுந்துார்பேட்டை சாலை அமைக்கப்பட்ட போது, வாகனங்களின் எண்ணிக்கை, 1.07 கோடியாக இருந்தது; தற்போது, 2.57 கோடியாக அதிகரித்து உள்ளது.
அதற்கேற்ப, சாலை வசதி ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. மத்திய அரசு, பசுமை சாலை அமைக்க முன் வந்தது; அதற்கு மாநில அரசு உதவி செய்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பசுமை வழிச் சாலை அவசியம். மாவட்ட கலெக்டர் மூலம், இழப்பீடு குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப் படுகிறது.
நாமக்கல்லில், கவர்னர் வரும் போது, தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் செய்யாமல், சட்டம் – ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில், அனுமதிக்காத இடத்தில் கறுப்புக் கொடி காட்டியதால், கைது செய்யப்பட்டனர்.
தவிர்க்க வேண்டும் :
சேலத்தில், ராணுவ தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் வருவதற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், விமான நிலைய விரிவாக்கம் அவசியம். 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு குறித்து, யாரும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- இன்று தமிழக சட்டப்பேரவையில் புயல் வீசும் என எதிர்பார்ப்பு!
- 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!
- மக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆளுநர் சுற்றுப்பயணம்!
- சாமானியரான சம்பத்! – சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறிய கதை!
- சேலம் விமான நிலையத்தால் கேள்விக்குறியாகும் மனித வாழ்க்கை!
- ஃபேஸ்புக் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!
- பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!
- டி.டி.வி.தினகரன் மூலம் ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்தார் – அமைச்சர் மணிகண்டன்
- இயக்குனர் கவுதமன் சற்றுமுன் திடீர் கைது!