Type to search

முதல்வர் எடப்பாடி பொய் கூறுகிறார்! – விவசாயிகள்!

India Head Line Tamil nadu

முதல்வர் எடப்பாடி பொய் கூறுகிறார்! – விவசாயிகள்!

Share

சேலம் டூ சென்னை அமையவிருக்கும் 8 வழிச் சாலையால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு தவியாய் தவித்துப்போய் உள்ளனர்.chief minister says lying! – farmers!

”பார்த்துப் பார்த்து செதுக்கி விளை நிலமாக மாற்றி வைத்துள்ள நிலத்தைச் சாலை அமைக்கின்றோம் என்று தடாலடியாக அளவீடு செய்து கற்களை நட்டு அடித்துப் பிடுங்க பார்க்கின்றனர்.

ஏன்…. எதற்கு…. என்றுகூட கேட்க இந்த நாட்டுல நாதி இல்லாமல் போயிடுச்சி… மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா கைவிட்ட 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தத் துடியாய் துடிப்பது ஏன் என்று தெரியவில்லை…” என்று கண்ணீர் வடிக்கின்றனர் பசுமை வழிச் சாலையால் நிலங்களை இழக்கும் விவசாயிகள்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்துள்ள இருளப்பட்டி கிராமத்தில் பசுமை வழிச் சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்களிடம், ”எனது அனுமதி இன்றி அளவீடு செய்தால், பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கூறி அதிகாரிகளைத் திருப்பி அனுப்பிய சந்திரகுமாரை சந்தித்துப் பேசினோம்…

chief minister says lying! - farmers!

”15 வருடங்களுக்கு முன்பு பொழப்பு நடத்த வழியில்லாமல் சேலம் இளம்பிள்ளையிலிருந்து இங்க குடிபெயர்ந்தோம். அப்போது எங்க வீட்டம்மாவின் நகை நட்டுகளை எல்லாம் விற்று இந்த 3 ஏக்கர் பூமியை விலைக்கு வாங்கி எங்க மொத்தக் குடும்பத்தின் உழைப்பால் இன்று பொன்விளையும் பூமியாக மாற்றி அமைத்தோம். இன்றைக்கு எங்கள் நிலத்தில், தென்னை, பாக்கு மற்றும் தேக்கு மரங்கள் வளர்ந்து, நிறைந்திருக்கின்றன. இது அத்தனையும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் 15 ஆண்டுகால உழைப்பு.

இப்போது திடீரென்று வந்து, ‘ஒரேயடியாக இதையெல்லாம் விட்டுப் போ’ என்று விரட்டினால் நாங்கள் எங்கே போய் நிற்பது? இந்த நிலத்தை நம்பித்தான் 7 ஜீவன்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இது அரசாங்கத்துக்குத் தெரியுமா..?

இன்னும் வீடு கட்டின கடனையே முழுசா அடைக்கவில்லை. அதற்குள் ‘நிலத்தையும் வீட்டையும் சாலைக்காக எடுக்கிறோம்’ என்று சொன்னால், எங்கள் வலியையும் வேதனையையும் வார்த்தைகள் மூலமாக சொல்ல முடியாது. ஏன் என்றால், இந்த நிலத்தை நம்பித்தான் இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணமும், இரண்டு பசங்களின் எதிர்காலமும் உள்ளது. ஏர் கலப்பை எடுத்து விவசாயம் செய்துவந்த எங்கள் கையில் பெட்ரோல் கேன் எடுக்க வைக்கிறாங்களே ஆட்சியாளர்கள்” என்று கதறியழுகிறார் சந்திரகுமார்.

காளிப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ஜெயா தனக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ”எங்களின் அனுமதியின்றி நிலத்தை அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிப்பேன்” என்று பெட்ரோல் கேனை காட்டி மிரட்டித் திருப்பி அனுப்பினார்.

ஜெயா நம்மிடம் பேசும்போது, ”எங்களுக்கென்று இருப்பது இந்த 3.20 ஏக்கர் நிலம் மட்டும்தான். இதுதான் எங்கள் வாழ்க்கை. இதுதான் எங்கள் எதிர்காலம். எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் அழிக்க நினைப்பது சரியா…? கரும்பும், நெல்லும் விளையும் இந்தப் பூமியை சாலை அமைக்கக் கொடுத்துவிட்டால், வரப்போகும் பசுமை வழிச் சாலையில்தான் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டும். கணவரின் மறைவுக்குப் பிறகு நம்பிக்கையோடு வாழ வைத்தது இந்த நிலம்தான். உயிரே போனாலும் இந்த நிலத்தை விடமாட்டேன்” என்றுகூறி அழுது கண்ணீர் வடிக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் பகுதிகளில் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தங்கள் உடையில், கருப்பு பேட்ஜ் அணிந்துகொள்வதோடு நிலத்திலும் கருப்பு கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், நிலத்தை அளவீடு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

ஆனால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எதிர்ப்பை அடக்க இருளப்பட்டி வி.ஏ.ஒ கதிரவன் மூலம் ஏ.பள்ளிபட்டி ஸ்டேஷனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்ய வைத்துள்ளது. அதாவது, ‘பசுமை வழிச் சாலைக்காக அளவீடு செய்ய சென்றபோது சந்திரகுமார் காவலர்களை மிகவும் அவதூறாகப் பேசியதாகவும், காளைகளை அவிழ்த்துவிட்டு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளையும், போலீஸையும் தாக்க முயற்சி செய்தார்’ என்றும் இந்தப் புகார் சொல்கிறது. ‘இது தொடக்கம்தான்… இதுபோல தொடரும்’ என்கின்றனர் காக்கிகள் தரப்பில்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: