விபத்தின்போது துள்ளிக் குதித்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்!
Share

சென்னையில் விபத்தின்போது சமயோஜிதமாக துள்ளிக் குதித்து ஓடிய இளைஞர் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் உயிர்தப்பியுள்ளார்.young man jumped just missed yard accident!
சென்னை பெரம்பூரில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து கதீட்ரல் சாலை அருகே வந்துகொண்டிருந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகரப் பேருந்து முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தை இடித்தது.
இதனால் இருசக்கர வாகனம் நிலைகுலைந்து பேருந்தின் சக்கரத்தின் கீழ் விழுந்தது. அப்போது அதில் இருந்த சேத்துப்பட்டைச் சேர்ந்த சித்திக் துணிச்சலுடன் துள்ளிக்குதித்துச் சாலையில் உருண்டு சென்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
மாநகரப் பேருந்து இருசக்கர வாகனத்தை இடித்ததுடன் நில்லாமல் அருகில் இருந்த மதில்சுவரில் மோதி நின்றது. கீழே விழுந்து உருண்டாலும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் இலேசான காயத்துடன் உயிர்பிழைத்த இளைஞர் சித்திக்கைக் காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் இதுல இதுவேறையா? – ஆர்.கே.நகர் மக்கள்!
- கோவாவுக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள்! கர்நாடகாவில் மரணம்!
- ஊடக நிறுவனத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி! – ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்!
- “தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!
- மர்மப்பொருளால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு!
- கின்னஸ் சாதனை படைத்த “குரு பாபா ராம்தேவ்” யோகா பயிற்சி!
- 62-வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்த இளைஞர்!