Type to search

ஓவியாவுக்கு பிறகு எனக்கு தான் ஆர்மி இருக்கு! துரைமுருகன்

India Head Line Tamil nadu

ஓவியாவுக்கு பிறகு எனக்கு தான் ஆர்மி இருக்கு! துரைமுருகன்

Share

{ turaimurukan army }

பிக் பாஸ் ஓவியாவுக்கு பிறகு எனக்கு தான் ஆர்மி இருக்கின்றது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதில் வரும் சில வீடியோக்கள் பார்த்திருப்பதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார்.

கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசுகையில், நான் சவால் விட்டது முதல்வருக்கு. ஓ.எஸ்.மணியனுக்கு அல்ல. குட்டி குட்டி ஆட்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் திட்டங்களுக்கு மக்களிடத்திலிருந்து எதிர்ப்பு வருவதை தவிர்க்க முடியாது. ஆண்டாண்டு காலமாக வைத்திருக்கும் நிலங்களை எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள் யாரும். மக்களிடம் திட்டம் குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும். போலீசை வைத்து மிரட்டி நிலம் எடுப்பது முடிமன்னர்கள் காலத்தில் தான் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், தூத்துக்குடியில் பிரச்சனை முடிந்த பிறகும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ராணுவத்தை கொண்டு மக்களின் மன எழுச்சியை அடக்கிவிட முடியாது எனவும் அவர் கூறினார்.

மேலும், தூத்துக்குடி மற்றும் சேலத்தில் நடைபெறும் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஏன் முன் நின்று நடத்தவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த துரைமுருகன், தன்னெழுச்சியாக மக்கள் நடத்தும் போராட்டங்களை கூட, அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள் என கூறுவதால் தான், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த தயங்குகிறார்கள் என்று கூறினார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து பேசிய துரைமுருகன், காங்கிரஸ் தலைவரை பார்ப்பதாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று கூறமுடியாது. புது கம்பெனி ஆரம்பித்தால் அதனுடைய பிராண்டை விளம்பரம் செய்வது போல தான் கமல் தனது கட்சியை விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

Tags: turaimurukan army

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like