பள்ளி மாணவ! மாணவிகள்! ஆசிரியர் காலில் விழுந்து கதறல்!
Share

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் கருத்தியல். பெற்றோருக்கு அடுத்தபடியாக இருக்கும் குரு என்கிற ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இந்த காலத்தைய பந்தம் எப்படி உள்ளது என்று கேட்டால், சற்று யோசிக்கத்தான் செய்வோம். ஒழுக்கம், கல்வி என எல்லாவற்றிலும் கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியர், மாணவ பருவத்தில் எதிரியாகவே தெரிவார். இதன் உச்சமாகவே, சில மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்களாக பழக வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதனை பெரும்பாலும் சினிமாக்களில் மட்டுமே கண்டு வருகிறோம். இப்படி ஒரு உண்மையான நெகிழ்ச்சி சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் பகவான், பணிமாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது பாசத்துக்கு அடிமையான மாணவர்கள், பகவானை பணி மாறுதல் செய்ய கூடாது என வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் பள்ளி முன் திரண்ட மாணவர்கள், தங்களுக்கு அதே ஆசிரியர் தான் பாடம் நடத்த வேண்டும் என கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பணி மாறுதல் ஆணையை பெற பள்ளிக்கு சென்றார் பகவான். ஆனால் அவரை பள்ளியில் இருந்து செல்லவிடாமல் சூழ்ந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எவ்வளவோ சமாதானம் செய்தும் மாணவர்கள் கேட்கவில்லை. ஒருசில மாணவர்கள் ஆசிரியர் பகவானை வெளியே விடாமல் அழுது அடம்பிடித்த காட்சி, நெகிழ்ச்சியின் உச்சமாக இருந்தது.
ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட ஆசிரியர் பகவான், மாணவர்களின் பாச வலையில் விழுந்ததுடன் கண் கலங்கினார். இந்த பாச போராட்டம் அதிகாரிகளின் மனங்களையும் கரைக்க வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு… ஆனாலும் பணி மாறுதல் என்பது சாதரணமாக கடந்து செல்ல வேண்டியது என்பது அதிகாரிகளின் வாதமாக இருக்குமாயின், பகவான் போன்ற அசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதும் அவர்களின் பொறுப்பு…
பல ஆண்டுகள் கழித்து இந்த சம்பவத்தை நினைத்து பார்த்தாலும், ஆசிரியர் பகவானுக்கும், மாணவர்களுக்கும் மனதில் ஒரு இனம்புரியாத சோகம் வந்துவிட்டுத்தான் செல்லும்….. ஆம்… மாற்றம் மட்டுமே மாறாதது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- `பசுமைச் சாலையைப் பற்றி பேசினாலே கைது’ – கொந்தளிக்கும் விவசாய சங்கம்!
- 62-வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்த இளைஞர்!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை!
- ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் – உயர்நீதிமன்றம்!
- சென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்! – எஸ்.வி.சேகர்!
- மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!
- கட்சியின் அங்கீகாரம் பெற தேர்தல் ஆணையத்தில் ம.நீ.ம தலைவர் கமல் மனு!
- ‘கொன்னுட்டு நிலத்தை எடுத்திட்டுப்போங்க!’ – கொந்தளிக்கும் விவசாயி!
- நியாயத்தை கேட்டால் தவறா? – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை!
- தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!
- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!
- சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது!