Type to search

“தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!

India Head Line Tamil nadu

“தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!

Share

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் புதிய போட்டியாளர்கள். அதில், பாலாஜி – நித்யா தம்பதி சென்றிருப்பது பலரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், ஒரே வீட்டில் என்ன செய்யப்போகிறார்கள், என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.know conscience side wrong – bigboss balaji mother!

மேலும் `இந்த வீட்டிலிருந்து வெளியேறும்போது, நித்யா என்னைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கு’ எனச் சொல்லிட்டுத்தான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்தார் பாலாஜி. அங்கே 100 நாள்கள் பாலாஜி இருப்பாரா? நித்யா அவரைப் புரிந்துகொள்வாரா? இதுகுறித்து பாலாஜியின் அம்மா, மீனா என்ன சொல்கிறார்?

“பாலாஜி, ‘பிக் பாஸ்’ மேடையில் என்ன பேசினார்னு தெரியாது. அவன் போயிருக்கிறது ஒரு கேம் ஷோ. பர்சனல் லைஃப் வேற, கேம் ஷோ வேற. அவனுக்கு மனைவி, குழந்தைகளோடு சேர்ந்து வாழணும்னு ஆசை. நித்யாதான் அவனை வேண்டாம்னு சொல்றாங்க. மனுஷனா இருந்தா தப்பு பண்றது இயல்புதான். அதை மன்னிச்சு ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்துப் போகும்போதுதான் லைஃப் நல்லா இருக்கும். இதை ரெண்டு பேரும் புரிஞ்சுக்கணும்” என்றபடி தொடர்கிறார் மீனா.

know conscience side wrong - balaji mother!

“அந்த வீட்டுக்குள்ளே பாலாஜி போகுறதுக்கு முந்தைய நாள்தான், நித்யாவும் அதில் கலந்துக்கறாங்கன்னு தெரியும். நித்யாவுக்கும் பாலாஜிக்கும்தான் பிரச்னை. எனக்கும் நித்யாவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லே. ஆனாலும், அவங்களோடு பேச முயற்சி பண்ணலை. சொல்லப்போனா நித்யா வீடு எங்கே இருக்குன்னே தெரியாது. கணவன் – மனைவி ரெண்டு பேருமா அந்த நிகழ்ச்சிக்குப் போயிருக்காங்க. யார் ஜெயிச்சாலும் எனக்குச் சந்தோஷம்தான். ஆனாலும், என் புள்ளை ஜெயிக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

பாலாஜி எல்லா விஷயத்திலும் கரெக்டா இருப்பான். சினிமாவில் ஒரு சாதாரண ஒரு சீன்ல வந்தாட்டாலே பலரின் ஆட்டிடியூட் மாறிடும். ஆனால், என் பையன் அப்படி கிடையாது. எல்லோரிடமும் இயல்பா பழகுவான். ஒருவேளை, பாலாஜியே நித்யாவை ஏதாவது சொல்லியிருக்கலாம். அப்படி ரெண்டு பேருக்குக்கிடையில் சண்டை வந்திருந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் அட்ஜெஸ் பண்ணிக்கணும். கணவன் – மனைவிக்குள்ளே சண்டை வராத வீடு எது? என் பையன் செலிபிரிட்டியா இருக்கிறதால் வெளியுலகில் பெருசு பண்ணிட்டாங்க. கணவன் – மனைவிக்கிடையே நான் தொந்தரவா இருக்கக்கூடாதுன்னுதான் தனியா இருக்கேன்.

எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. நித்யாவையும் பொண்ணு மாதிரிதான் நினைக்கிறேன். அவங்களைப் பிரிஞ்சதிலிருந்து பாலாஜி என்னோடுதான் இருக்கான். அவன் பொண்ணுன்னா அவனுக்கு உயிர். ‘நான் சம்பாதிக்கிறது எல்லாமே என் பொண்ணுக்காகத்தானே. யாருமே இல்லாமல் யாருக்காக நான் வாழணும்னு’னு வருத்தப்படுவான். அப்பா என்கிற முறையில் வாரத்துக்கு ஒருமுறையாவது அவனிடம் குழந்தையைக் காட்டலாமே. நாங்களும் கேட்டுப் பார்த்துட்டோம். நித்யா அதுக்கு சம்மதிக்கலை. பாலாஜி ஷூட்டிங்கில் இருக்கும்போதும் வாட்ச் பார்த்துட்டே இருப்பான். ‘இது பொண்ணு ஸ்கூலுக்குப் போற டைம்; சாப்பிடற டைம்’ யோசிச்சுட்டிருப்பான். அடிக்கடி நித்யாவுக்கு போன் பண்ணி ‘பாப்பா சாப்பிட்டாளா? ஸ்கூலுக்குக் கிளம்பிட்டாளா?’னு கேட்டுட்டே இருப்பான். அவனுடைய சிந்தனை முழுக்க பொண்ணு பற்றியே இருக்கும். இப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்து எந்தக் குழந்தையாவது பயப்படுமா சொல்லுங்க?” என வருத்தமான குரலில் கேட்கிறார் மீனா.

“அவனுடைய தொழிலில் நைட் வேலை பார்க்கவேண்டியிருக்கும். வீட்டுக்கு வரும்போது குடிச்சுட்டு வர்றது தப்புதான். நானும் பலமுறை சொல்லிப் பார்த்துட்டேன். இனிமே உன் குழந்தைக்காக விட்டுக்கொடுக்கணும்னு சொல்லியாச்சு. என்னைக்காவது பார்ட்டி சமயத்தில் குடிப்பான். அப்போதான் சண்டை வரும். ரெண்டாவது விஷயம், அவனுக்கு எதுவும் செய்துகொடுக்கலைனாலும் பரவாயில்லை, குழந்தைக்குத் தேவையானதை செய்துகொடுக்கணும்னு நினைப்பான். அது நடக்காதபோது சண்டை வரும். இப்போ, அவன் குழந்தையைப் பிரிஞ்சு ரொம்பவே கஷ்டப்படுறான். ராத்திரி ஷூட்டிங் முடிஞ்சு வர்றவனுக்காக சமைச்சுவெச்சுட்டு காத்திருப்பேன். நான் சாப்பிட்டதா சொன்னால், அவன் சாப்பிடாமலே தூங்கப் போயிருவான். அதனால், ராத்திரி எவ்வளவு நேரமானாலும் நானும் சாப்பிடாமல் காத்திருப்பேன். நான் என்னதான் அன்பா பார்த்துக்கிட்டாலும், அவன் பொண்ணு இல்லாத ஏக்கம் அவனுக்கு இருக்கு. இப்பவும் பாப்பாவுக்கு அவன்தான் ஃபீஸ் கட்டுறான். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போறோம்னு மூணு மாச ஃபீஸையுமே கட்டிட்டான்.

know conscience side wrong - balaji mother!

`உன் கோபம், ஈகோ எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுடுனு சொல்லியிருக்கேன். பாலாஜியும் நித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இது நல்ல வாய்ப்பு. அதைப் பயன்படுத்திக்கிறதும் பயன்படுத்திக்காததும் அவங்க விருப்பம். குழந்தைகளிடம் ஒருத்தரைப் பற்றி கெட்டதாகவே சொல்லி வளர்த்தால், அவங்களை கெட்டவர்களாகத்தான் நினைக்கும். அப்படித்தான் என் பேத்தியும் என் மகனைப் பார்த்து பயப்படறா. நான் அவன் அம்மா என்பதால் சப்போர்ட் பண்ணலை. எங்க ஏரியாவுக்கு வந்து விசாரிச்சுப் பாருங்க. பாலாஜி எப்படிப்பட்டவன்னு சொல்வாங்க. ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அவங்க லவ் பற்றி தெரிஞ்சதுமே ரெண்டு பெற்றோர்களும் உட்கார்ந்து பேசினோம். ‘பாலாஜிக்கு ஷூட் இருக்கும்போதுதான் சம்பளம் கிடைக்கும். இதைக் காரணமாவெச்சு சண்டைப் போடக்கூடாது என்பது வரை எல்லாத்தையும் பேசினோம். அதை நாங்களே சமாளிச்சுக்கிறோம்னு சொன்னதுக்கு அப்புறமாகத்தான் கல்யாணம் செஞ்சுவெச்சோம்.

ஐந்து வருஷம் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தினாங்க நித்யா மாசமா இருந்த சமயத்தில், உள்ளங்கையில் வெச்சு பார்த்துக்கிட்டான் பாலாஜி. இப்போ அவன்தான் எல்லா குற்றமும் பண்ணிட்ட மாதிரி பேசறது என்ன நியாயம்? குழந்தையைப் பார்த்துக்கலைன்னு ஆரம்பிச்ச சண்டைதான் இந்த அளவுக்கு வளர்ந்தது. யார் தப்பு செஞ்சதுன்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும். என் பையன் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது நித்யாவோடு சமாதானம் ஆகி வந்தால் எனக்குச் சந்தோஷம்தான். நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்” என்கிறார் மீனா.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: