எஸ்.வி சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்!
Share

பல்வேறு சர்சைகளுக்கிடையே எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். நடிகர் எஸ்வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் மிகவும் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். எனவே அவரை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது.SV shekar present egmore court today
இந்நிலையில் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. மேலும் உச்ச நீதிமன்றம் எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெருமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் எஸ்.வி சேகர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசஸார் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைதாவதிலிருந்து அவரை காப்பாற்றினர். அதனால் எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகளின் உதவியுடன், கைதாகாமல் உல்லாசமாக சுற்றி வந்த எஸ்.வி.சேகர் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று நீதிமன்றத்தில் ஆஜராயுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- பிக்பாஸ்! நிகழ்ச்சி அவசியமில்லை! – நடிகை கஸ்தூரி!
- நியாயத்தை கேட்டால் தவறா? – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை!
- தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!
- கூடங்குளம் அணுமின் நிலையம்! – கைவிரித்த அணுசக்திக் கழகம்!
- நன்கொடைக்காக மோடியின் நன்றி கடன்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! – பிருந்தா காரத்!
- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!
- சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது!
- பி.டி.பியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது பா.ஜ.க!
- இந்து மதப் பெண்ணின் உடலை வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் செய்த காரியம்!