Type to search

“என்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்” : பிறப்புறுப்பை அறுத்தெறிந்த துறவி!

INDIA

“என்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்” : பிறப்புறுப்பை அறுத்தெறிந்த துறவி!

Share

{ saint proved recover mystery }

பாலியல் பலாத்காரம் செய்து சிறையில் இருக்கும் போலிச்சாமியார்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதால், ஆத்திரமடைந்த சாமியார் தனது மர்ம உறுப்பை வீசி எறிந்து தான் உண்மையான துறவி என்பதை நிரூபித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், மந்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் புரோஹித்(வயது41). துறவியான அனில் புரோஹித் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு சேவாவள்ளி தாம் ஆஸ்ரம் தொடங்கி நடத்தி வந்தார். மக்களுக்கு அவ்வப்போது பிரசங்கம், அறிவுரைகள் கூறிவந்துள்ளார்.

ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருபகுதியினர் அனில் புரோஹித்தை நம்பவில்லை. பாலியல் பலாத்காரக் குற்றத்தில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் ஆஸ்ரம் பாபா, பாபா ராம் ரஹிம் சிங், பல்ஹரி பாபா, தாதி மஹாராஜ் ஆகியோருடன் அனில் புரோஹித்தை ஒப்பிட்டுப் பேசி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இந்த போலிச்சாமியாரைப் போலத்தான் அனில் புரோஹித்தும் இருப்பார் யாரும் அவரை நம்பாதீர்கள் என்று ஒரு பகுதி மக்கள் எதிர்மறையாகப் பிரச்சாரம் செய்தனர். இதனால், பெரும் மனவேதனையில் அனில் புரோஹித் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மந்தஹன் கிராமத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து பிரசங்கத்தில் துறவி அனில் புரோஹித் ஈடுபட்டு இருந்தார்.

அந்த கூட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களும் பங்கேற்று துறவி அனில் புரோஹித்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, கூட்டத்தில் உள்ள சிலர் அனில் புரோஹித்தை, பாலியல் குற்றத்தில் சிக்கி போலிச்சாமியார்களுடன் ஒப்பிட்டுப் பேசி கிண்டல் செய்தனர். இதைக் கேட்ட துறவி அனில் புரோஹித் கூட்டத்தில் இருந்தவர்களை அமைதி காக்கும்படியும், தான் நீங்கள் நினைக்கும்படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் மோசமான சாமியார் இல்லை. ஏதாவது நான் தவறு செய்தால் என்னை தண்டிக்கலாம் என்றார்.

ஆனால், கூட்டத்தில் உள்ளவர் அனில் புரோஹித்தைப் பார்த்துச் சிரித்தனர். இதனால், ஆத்திரமடைந்த துறிவி அனில் புரோஹித் தனது ஆணுறுப்பை அறுத்து, கூட்டத்தில் இருவர்கள் முன் வீசி எறிந்து, இனிமேல் என்னை எந்தச் சாமியாருடன் ஒப்பிட்டுப் பேசமாட்டீர்கள் என்றார்.

இதைப் பார்த்த அவரின் ஆதரவாளர்கள் ரத்தவெள்ளத்தில் இருந்த துறவி அனில் புரோஹித்தை அருகில் உள்ள ஆல்வார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர் ரத்தப்போக்கு கூடுதலாக இருப்பதால், ஜெய்ப்பூர் சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தரம்பால் கூறுகையில், ‘‘ஆதரவாளர்கள் போலிச்சாமியாருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதால், அவமானப்பட்ட அனில் புரோஹித், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கத் தனது ஆணுறுப்பைக் கண் இமைக்கும் நேரத்தில் அறுத்துத் தூக்கிவீசிவிட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட இருக்கும் அவரை ஜெய்ப்பூர் சிறப்பு மருத்துமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிரசங்கத்தில் பங்கேற்ற மக்கள் கூறுகையில், ‘‘துறவி அனில் புரோஹித்தும் மற்ற போலிச் சாமியார்களைப் போல் மாதத்தில் இரு நாட்கள் இரவு நேரத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். இதனால், பாலியல் குற்றத்தில் சிக்கிய போலிச் சாமியார்கள்போல் இவரும் மோசமானவர் என்ற ரீதியில் மக்களில் ஒருசிலார் பேசினார்கள்.

ஆனால், அதை ஏற்க அனில் புரோஹித் மறுத்தார். நீங்கள் நினைப்பதுபோல் நான் பாலியல் குற்றங்கள் செய்யும் சாமியார் அல்ல. நான் துறவி என்று அடிக்கடி கூறி வந்தார்.

அவர் குறித்த வதந்திகளும், கிண்டல்களும் அதிகமாகவே தான் உண்மையான துறவி, ஆசைகளைத் துறந்தவன் என்பதை நிரூபிக்கத் தனது ஆணறுப்பை அறுத்து எறிந்துவிட்டார்’’ என்று தெரிவித்தனர்.

Tags: saint proved recover mystery

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

*விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் ​உயிருடன் இருக்கிறாரா?

*அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!

*காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!

*கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com
*Tamilgossip.com
*Tamiltechno.com
*tamilfood.com

Tags:

You Might also Like