போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
Share

திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.Just forgive! – Actress Kasturi! twitter issue
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் வெளியான தீர்ப்பை வைத்து, திரைப்பட நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அவரது சமூக வலைத்தள கருத்துக்கு திருநங்கைகள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
காணொளி : 👇👇👇👇👇
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்டு நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2 நாட்களுக்கு முன்னதாக வேடிக்கையாக பேசுவதாக எண்ணி மிகவும் தவறான ஒரு ட்வீட்டை பதிவு செய்து விட்டேன். அதனால் நாம் மிகவும் மதிக்கும் என்னுடைய நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் மனது வேதனைப்படுகிறது என்பதை அறிந்த உடனேயே அந்த ட்விட்டை நான் நீக்கிவிட்டு. பகிரங்கமாகவும் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.
மேலும் நான் எல்.ஜி.பிடி சமுதாய மக்களிடம் நேரடியாகவே விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளேன். சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவே திருநங்கைகளிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டு உள்ளேன். அவர்களும் என்னை பெருந்தன்மையாக மன்னித்து இதனை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் நீக்கப்பட்ட பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பரப்புவதால் உண்மைக்கு புறம்பான சர்ச்சையாக இது மாறுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஸ்கீரின்ஷாட்டை பரப்புவதால் என்னுடைய சகோதர சகோதரிகளை கொச்சைப்படுத்தி காயப்படுத்துகிறீர்கள். என்னுடைய மனதையும் காயப்படுத்துகிறீர்கள். நான் மனுஷிதான். மறுபடியும் நான் தவறு செய்வேன். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது என்னை நீங்கள் கேள்வி கேளுங்கள். இப்போது நான் செய்தது தவறுதான். இதை விட்டுவிடுங்க. என்னோடு சேர்த்து ஒரு சமூகத்தின் உணர்வை காயப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
More Tamil News
- கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
- பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
- கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
- 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!
- வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் கடும் நடவடிக்கை – ஜெயக்குமார்!
- மது வாங்கிக்கொடுக்குமாறு தாயிடம் அடம்பிடித்த குழந்தை!
- அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?