மது வாங்கிக்கொடுக்குமாறு தாயிடம் அடம்பிடித்த குழந்தை!
Share

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த முத்து நாய்கன் பட்டியில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடை வழியாகத்தான் கோயில், பள்ளி, கல்லூரிகளுக்கு இப்பகுதி மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவ்வழியாகச் செல்லும் பெண்கள், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.child admonished buy alcohol
இந்நிலையில் பெண் ஒருவர், தனது குழந்தையை அவ்வழியாக பள்ளிக்கு கூட்டிச்செல்லும்போது, அந்த குழந்தை மது வாங்கிச் செல்பவர்களைப் பார்த்து, அவர்கள் வாங்கிச் செல்லும் ஜூஸை, தனக்கும் வாங்கிக் கொடுக்குமாறு அடம்பிடித்துள்ளது.
இதனால், அதிர்ச்சிக்குள்ளான அந்த தாய், அது பற்றி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையறிந்த பொதுமக்கள், டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மதுக் கடையை அகற்றவில்லை என்றால் தங்களுடைய குழந்தைகளும் மது அருந்தக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும் என வேதனையுடன் கூறினர்.
More Tamil News
- நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!
- காதலை மறுத்த பெண்! – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்!
- அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!
- சி.ஐ.ஏவின் தீவிரவாத பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் – விஸ்வ ஹிந்து பரிஸத் பஜ்ரங்தாள் சேர்ப்பு!
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!