தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
Share

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பிறை தென்பட்டதால், அந்த நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில், இன்னும் பிறை தென்படாத நிலையில், அங்கு இன்னும் ரம்ஜான் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.tomorrow ramajan festival tamilnadu
தமிழகத்தில் பிறை தென்படவில்லை என்பதால், 30 நாள் நோன்பு முடித்து, சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதனை, தமிழக அரசின் தலைமை காஜி சலாஹூதீன் முகம்மது அய்யூப், அறிவித்தார்.
இதனிடையே, தலைமை ஹாஜியின் அறிவிப்பை தொடர்ந்து, இன்று அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ரம்ஜானுக்கு மாலை 6 மணியளவில் அறிவிக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பு, இரவு 8.30 மணியளவில் வாபஸ் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல் செயல்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அதற்கு பதிலாக சனிக்கிழமை ரம்ஜான் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
More Tamil News
- `அ.தி.மு.க ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார்’ – ஆ.ராசா காட்டம்!
- காவு வாங்கும் எடப்பாடி அரசு : சி.பி.எம் பிரச்சார கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு!
- கல்லூரியில் தலித் மாணவிகளுக்கு சேர்க்கை மறுப்பு : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
- எஸ்.சி:எஸ்.டி மக்கள் மீதான போலீஸ் அத்துமீறல் – பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் அதிகம்!
- கோலியின் சவாலுக்கு “பிரதமர் மோடி” ரெடி – ஃபிட்னஸ் வீடியோ வெளியீடு!