பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்!
Share

{ Coimbatore government hospital }
கோவை: செத்த பிணமே ஆனாலும் பணத்தை பிடுங்கி கொண்டுதான் புதைக்குழிக்கே அனுப்புவார்கள் போலிருக்கு. மனசாட்சியை அடகுவைத்து மனிதம் இழந்தவனின் செய்தி இது.
கோவை அரசு மருத்துவமனை. ஈரோடு, உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் இறந்த உடல்கள் இங்கு கொண்டு வரப்படும்.
இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைத்து உடற்கூறு ஆய்வு செய்யப்படும். பின்னர் அவை குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதுபோல உடற்கூறு ஆய்வுக்கூடத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 பிரேதங்கள் வரை பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் உடற்கூறாய்வு செய்தபின்பு உறவினர்களிடம் ரூபாய் 2000, 3000 என நபர்களுக்கு ஏற்றார்போல பிணவறையில் ஊழியர்கள் பணத்தை வாங்குவதாக இந்த மருத்துவமனை மீது தொடர்ந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
கேட்ட தொகையை கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது பணத்தை குறைவாக கொடுத்தாலோ, குடும்ப உறவினர்களை தரக்குறைவாகப் பேசி கீழ்த்தரமாக நடத்துவது கடைமட்ட பணியாளர்களுக்கு சர்வசாதாரணமாக போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் பணத்தைக் கொடுத்தால்தான், பிணத்தைக் கொடுப்போம் என அடாவடித்தனமும் நடைபெற்று வருகின்றது.
மிரட்டலுடன் வசூல்வேட்டை இந்நிலையில், மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இருக்கும் பரமசிவம் என்பவர் பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர்.
ஆனால் பரமசிவமோ வசூல்வேட்டையிலேயே குறியாக இருந்து, உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணம் தந்தால்தான் பிணத்தை வெளியே எடுத்து கையெழுத்து போடுவேன், பிறகுதான் பிணத்தை தருவேன் என்று முரட்டுத்தனமாக கத்த ஆரம்பித்துவிட்டார்.
மேலும் 50, 100 வாங்க நான் என்ன பிச்சைக்காரனா? எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். இதையடுத்து, பரமசிவம் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு, உறவினர்கள் சடலத்தை வாங்கி சென்றுவிட்டார்கள்.
ஆடின காலும் பாடின வாயும்.. இந்த அவல சம்பவம் அரங்கேறும்போது அருகில் இருந்து ஒரு காவலர் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றிருக்கின்றார். இந்த கண்றாவி காட்சிகள் அனைத்தும் வீடியோவாக வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
பரமசிவம் குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரிக்கும்போது, இவர், ஏற்கனவே லஞ்சப்புகாரில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டவராம். தற்போது மீண்டும் பணிக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குமா என்ன? திரும்பவும் பரமசிவம் அதே பாணியிலேயே இறங்கிவிட்டார்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, “யாரிடமும் லஞ்சம் கேட்க கூடாது என நான் ஒவ்வொருமுறையும் ஊழியர்களிடம் சொல்லி வருகின்றேன்.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கத்தான், பிணவறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கி வருகின்றோம். இருந்தாலும் இதுபோல சில நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. எனினும் பரமசிவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Tags: Coimbatore government hospital
<< மேலதிக இந்திய செய்திகள் >>
*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!
*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி
*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!
*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!