டெல்லியை கதிகலங்க வைக்கும் – “சூப்பர் லேடி தாதா”
Share

டெல்லியை கதிகலங்க வைக்கும் ஒரு பிரபலமான பெயர் லேடி தாதா, குற்றவாளிகளின் உலகில் அம்மா என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் டெல்லியில் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர்.will put delhi edge – “super lady dada”
லேடி தாதா என்றழைக்கப்படும் பஷ்ரீன், மீதும் அவருடைய மகன்களின் மீதும் 100க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட அதிபயங்கர குற்ற வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து பஷ்ரீனுக்கு 8 மகன்கள் உள்ளனர். அவரின் மகன்களான ஷமீம் மீது 42 வழக்குகளும், ஷகீல் மீது 15 வழக்குகளும், வகீல் மீது 13 வழக்குகளும், ஃபைசல் மற்றும் சன்னி ஆகியோர் மீது தலா 9 வழக்குகளும், சல்மான் மீது 2 வழக்குகளும், மேலும் 18 வயதுக்குக் கீழ் உள்ள ஒரு மகன் மீது 11 வழக்குகளும் ( 7 கொலை மற்றும் 3 கொலை முயற்சி உட்பட) என ஒட்டுமொத்தமாக அவர் மீதும் அவரின் மகன்கள் மீது 113 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர்கள் குடும்ப சகிதமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பஷ்ரீன் தன்னுடைய மகன்கள் மட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட சிறுவர்களை போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி, அவருடைய கும்பலில் சேர வைத்துள்ளார். சிறுவர்களுக்கு ஆயுதங்கள் அளித்து, குற்றச்செயல்களில் ஈடுபட வைத்துள்ளார் பஷ்ரீன்.
டெல்லியின் சங்கம் விஹார் பகுதி மக்களுக்கு, பஷ்ரீன் என்றால் பெரும் பயம் உள்ளது, அப்பகுதி மக்களுக்கு அரசு அளிக்கும் குடிநீர் கூட யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதை இவரே தீர்மானிக்கிறார். அதற்காக இவரே பணத்தை வசூலித்து வந்துள்ளார். எனினும் காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் பஷ்ரீனின் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தலைமறைவாக இருக்கும் பஷ்ரீன் அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டை சுற்றிவளைத்து அங்கு காவல்துறையினர் செல்வதற்கு சிறிது நேரம் முன்னரே அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. அவருடைய வீட்டின் வெளிப்புறம் முழுக்க சிசிடிவி கேமராக்களை அவர் பொருத்தியிருந்ததால் காவல்துறையினரால் அவரை பிடிக்க முடியாமல் போனதாக தெரியவருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று மிராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டது முதல் பஷ்ரீன் தலைமறைவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பஷ்ரீன் மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 4 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர், இருவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் பிணையில் வெளிவந்துள்ளனர்.
More Tamil News
- ஐந்து கரடிகளுக்கு தன் கண்களை விருந்தளித்த இளைஞர்!
- காலா – ராமனா? ராவணனா? – ரஜினி நிழலும்! ரஞ்சித் நிஜமும்!
- மாணவிக்கு பாலியல் தொந்தரவு – அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!
- குழந்தைகளுக்காக “நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா” விழிப்புணர்வு பேரணி!
- பொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்!