Type to search

காலா – ராமனா? ராவணனா? – ரஜினி நிழலும்! ரஞ்சித் நிஜமும்!

India Top Story Tamil nadu

காலா – ராமனா? ராவணனா? – ரஜினி நிழலும்! ரஞ்சித் நிஜமும்!

Share

‘‘தூத்துக்குடி போராட்டத்தை ரஜினி எப்படி இழிவாகப் பேசலாம்? அவர் நடித்த ‘காலா’ படத்தைப் புறக்கணிப்போம்’’ என்றது ஒரு தரப்பு, ‘‘இது ரஜினி படமல்ல, ரஞ்சித் படம். அதுக்காகவே பார்க்கணும்’’ என்றது மற்றொரு தரப்பு. ‘‘எங்கள் தலைவர் படம், இதைத் தடுக்க இவர்கள் யார்?’’ என்று ரசிகர்கள் கறுப்பு வேட்டியை மடித்துக் கட்டினார்கள். மொத்தத்தில், ரஜினியும் இரஞ்சித்தும் காலாவும் சில நாட்களாக எப்போதும் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ஆகின. இவை எதையும் கண்டுகொள்ளாமல், ‘‘ரிவ்யூ பாரு, அப்புறம் படத்துக்குப் போலாம்’’ என நிம்மதியாக இருப்பவர்களையும் உசுப்பேற்றிவிட்டன இந்த மோதல்கள். காலாவுக்கு மட்டும் ஏன் இத்தனைக் கேள்விகள்? இத்தனை நாள்களாக பூடகமாக இருந்த ரஜினியின் அரசியல் பயணம், இப்போது ஓபன் சீக்ரெட்டாகி இருப்பதுதான் காரணம். ரஜினியின் அரசியல் ‘என்ட்ரி’ அறிவிப்புக்குப்பின் வெளியாகும் முதல் படம் இதுதான்.kala – ramana? ravanana? – rajini shadow! revenge real!

ரஜினி குரல் :

ரஜினிக்கென்று முன்பு ஒரு வாய்ஸ் இருந்தது. மறுப்பதற்கில்லை. அவர் எதைப் பற்றிப் பேசினாலும், அது ஓர் ஆரோக்கியமான விவாதமானது. ஆனால், இப்போது ரஜினி அவரைப் போலவே ‘ஆன்மிக அரசியலை’ முன்னெடுக்கும் பி.ஜே.பி-யின் குரலாக இருக்கிறார், என்பதுதான் மற்ற கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டு. கட்சியின் லோகோவில் தாமரைச் சின்னத்தை வைத்ததில் தொடங்கி, சமூகப் பிரச்னைகளில் ஒரே கருத்துகள் சொல்வது வரை ரஜினியின் நிழலாக இருந்து அவரை இயக்கும் அரசியல் குருக்கள் அனைவரும் பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள்.

kala - ramana? ravanana? - rajini shadow! revenge real!

மேலும் ரஜினி ஆவேசமாக, ‘தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள்’ என்றார். ‘ரத்தம் சிந்தாத போராட்டம்தான் வேண்டும்’ என்றார். ‘எதுக்கெடுத்தாலும் போராடுனா தமிழ்நாடு மொத்தமும் சுடுகாடாயிடும்’ என்றார். ‘காவல்துறை மனிதப் புனிதர்களின் கூட்டுச் சங்கமம்’ என்ற அர்த்தம் தொனிக்கப் பேசினார். ‘முதல்வரைப் பதவி விலகச் சொல்வது தீர்வாகாது’ என்றார். ‘இனிமே தமிழ்நாட்டுக்குள் யாரும் தொழில் தொடங்க வரமாட்டார்கள்’ என்றார். முகமும், வாயும் ரஜினியுடையதுதான். ஆனால் அவர் வாயைக் குவிக்க, பின்னாலிருந்து அவருக்கு டப்பிங் கொடுப்பது யார் என்ற பட்டிமன்றத்தில், பி.ஜே.பி என்று சொல்பவர்களே அதிகம். இந்த விமர்சனத்துக்கு ரஜினியும் பதில் சொல்லவில்லை.

இந்நிலையில் இந்தக் குரலுக்கும் காலாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படியே உல்டாவாக காலா ரஜினி இருக்கிறார். ரஜினி பேசும் அரசியலும், காலா பேசும் அரசியலும் வேறுவேறாக இருக்கின்றன.

பா.ரஞ்சித்தின் குரல் :

காலா ரஜினி பேசியிருக்கும் வசனங்கள் யாருடைய விஷயங்கள்? ‘கறுப்பு என் கண்ணை உறுத்துது’ என்கிறார் படத்தில் வரும் அரசியல்வாதி. நிஜத்திலும் நிறைய பேரை உறுத்துகிறதுதான். ஆனால், ‘கறுப்பு உழைப்போட வண்ணம்’ என அடையாளப்படுத்துகிறார், இயக்குனர் பா.இரஞ்சித். படம் நெடுக போராட்டத்தின் குறியீடாக கறுப்பு மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது.

kala - ramana? ravanana? - rajini shadow! revenge real!

‘இந்த உடம்புதான் நம்ம ஆயுதம். கூட்டுங்கடா எம் மக்களை’ என மக்களை ஒன்று திரட்டிப் போராடுகிறார், காலா ரஜினி. அழுக்குப் படிந்த அந்தப் பகுதியின் பக்கம் தேசிய கவனம் திரும்புகிறது. ‘இங்கே ஒவ்வொருத்தனும் காலாதான். கடைசிவரை போராடுங்க’ என ஓங்கி ஒலிக்கிறது காலாவின் குரல். அதிகார வர்க்கம் ஆட்டம் காண்கிறது. இறங்கி வருகிறது. கோரிக்கைக்குத் தலை சாய்க்கிறது. ‘மக்கள் போராட்டமே உரிமைகளை மீட்க ஒரே வழி’ என்கிறது காலா. தோல்வி தந்த கடுப்பில் தாராவியில் கலவரத்தைத் தூண்டி 144 தடையுத்தரவு போடுகிறார்கள். இரவோடு இரவாக உள்ளே நுழைந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறது காவல்துறை. காவல்துறை புனித பிம்பமல்ல, அதிகாரவர்க்கத்தின் வேட்டை வாகனம்தான் என்ற கறுப்பு உண்மையை நிறுவுகிறது படம்.

‘உன்னைக் குறி வச்சேன். தப்பிச்சுட்டே. ஆனா அது என் தப்பில்ல, பகவான் தப்பு’ என்று காலாவைப் பார்த்து அரசியல்வாதி சொல்வதாக ஒரு காட்சி இருக்கிறது, காலாவில். இறுதிக்கட்டத்தில், ‘பகவானுக்கு எல்லாமே படைச்சாச்சு… காலாவோட தலையைத் தவிர’ என ‘ஆன்மிக அரசியல்’ பேசுகிறார், அதே அரசியல்வாதி. ‘என்னோட நிலத்தை அதிகாரத்தால பிடுங்குறதுதான் உன் கடவுளோட வேலைன்னா, அந்தக் கடவுளையும் சும்மா விடமாட்டேன்’ என்று கர்வமாக கூறுகிறார், காலா. ‘மனு’ ரியாலிட்டி ஹோம்ஸ் வழங்கும் ‘தண்டகாரணியம் நகர்’ என நவீன மும்பைக்குப் பெயர் வைக்கிறார்கள், படத்தில். அதை மக்கள் போராட்டம் மூலம் தகர்த்து, ‘யாரும் யாருக்கும் அடிமையில்லை’ எனச் சொல்கிறது படம்.

‘காலா ஒரு ராவணன்மா. அவனைக் கொல்லணும்னு வால்மீகியே எழுதியிருக்காரு. நான் கொன்னுதானே ஆகணும்’ என்று கடைசி முறையாக ஆன்மிக அரசியல் பேசுகிறார், அந்த அரசியல்வாதி. அவர் வீட்டில் ராம கதாகலாட்சேபம் நடக்க நடக்க, இங்கே தாராவியின் குடியிருப்புகள் கொளுத்தப்படுகின்றன. பொங்கியெழும் கறுப்புநிற ராட்சதர்கள் திருப்பி அடிக்கிறார்கள். ராம காதை மெல்ல, மெல்ல ராவண காவியமாக மாறுகிறது. ‘உங்களின் இதிகாசங்கள் எங்களுக்கானவை அல்ல, மாற்றி எழுதும் நேரமிது’ என்பதை உணர்த்துகிறது படம். இவை அனைத்துமே இயக்குநர் பா.ரஞ்சித்தின் குரல்.

kala - ramana? ravanana? - rajini shadow! revenge real!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் குரலுக்கு ரஜினி வாய் அசைத்துள்ளார், என்பதுதான் காலாவில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதாவது, படத்தில் ரஜினி நிழலாகத் தெரிந்தாலும், நிஜமாகத் தெரிவது பா.ரஞ்சித் என்பவர்தான்.

எது நிஜ ரஜினி?

ரஜினியை அரசியல் ரீதியாக ஆதரிப்பவர்களின் கொள்கைதான், தூத்துக்குடி சம்பவத்தில் அவரது கருத்தாக வெளிப்பட்டது. அதனை ஆதரித்துக் கருத்துச் சொல்பவர்களது அரசியலுக்கு நேர் எதிரானது, காலா படத்தில் ரஜினி பேசும் வசனங்கள். ரஜினியை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்கள், காலா படத்தின் வசனங்களை ஆதரிக்கிறார்கள். அதாவது, சிலருக்கு ராமனாகவும் சிலருக்கு ராவணனாகவும் ரஜினி தெரிகிறார்.

சினிமாவில் வேண்டுமானால் டபுள் ஆக்ட் ஜெயிக்கும். அரசியலிலும் ஜெயிக்குமா? இனி படத்தில் அல்ல, நிஜத்தில் பதில் சொல்லவேண்டிய நெருக்கடி ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிறது.

More Tamil News

Tamil News Group websites :

Tags: