புதிய கட்சி பெயரை அறிவித்தார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்!
Share

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், “அண்ணா திராவிடர் கழகம்” கட்சியை தொடங்கி வைத்து கட்சியின் புதிய கொடியையும் திவாகரன் அறிமுகம் செய்து வைத்தார்.new party announced Sasikala brother Divakaran
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய திவாகரன், கருப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார். கொடியில் உள்ள கறுப்பு சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறிப்பதாக தெரிவித்த திவாகரன், திராவிடம் பெரியாரையும், அண்ணா பேரறிஞர் அண்ணாவையும் குறிக்கும் என்றார்.
மேலும் கட்சி வேறு, உறவு வேறு, என தினகரன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திவாகரன், உறவு இல்லை என்றால் தினகரனால் பதவிக்கு வந்திருக்க முடியாது என தெரிவித்தார். கமலுக்கு காவிரி என்றால் என்னவென்றே தெரியாது, என குறிப்பிட்ட திவாகரன், 50 ஆண்டு கால காவிரி போராட்டத்தை மீண்டும் பின்னுக்கு தள்ளுவதாக குற்றம்சாட்டினார்.
More Tamil News
- சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர்!
- மனைவி நண்பனுடன் நட்பா? காதலா? சந்தேகத்தில் கணவர்!
- உணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு – சி.சி.டி.வியில் சிக்கிய திருடர்கள்!
- புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சி நிறுத்தம் – பா.ஜ.கவினர் அட்டூழியம்!
- மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்!