கோவை – பெங்களூரு இடையே வைஃபை வசதியுடன் ரயில் சேவை!
Share

{ Railway service Wi-Fi facility }
கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் ரயில் சேவையை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன், மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் புதுப்பாளையம், வீரபாண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் உதய் விரைவு ரயில் சேவையை இணையமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
குளிர்சாதன வசதி, வைஃபை வசதி ஆகியவற்றுடன் கூடிய உதய் விரைவு ரயில், திங்கட் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. கோவையிலிருந்து பெங்களூரு செல்ல 610 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையில் காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் 12.40 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூருவில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்தனர்.
Tags: Railway service Wi-Fi facility
<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>
*கணவர்களை பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: செக்ஸ் மாத்திரைகளுக்கு பின் கொடூர கொலை!
*“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
*மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்
*சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்!
*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு!
*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??
*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்!