சூடுபிடிக்கும் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம்!
Share

{ Resistance Neet selection Students }
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு மாணவிகள் மரணம் அடைந்துள்ளனர்.
சென்று வருடம் அனிதாவும், இந்த வருடம் பிரதீபாவும் நீட் கொடூரத்தால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் நீட்டிற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றார்கள்.
நீட்டுக்கு எதிராக போராட்டம் நடக்காத வகையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த நிலையில் நீட்டிற்கு எதிராக மீண்டும் போராட்டம் செய்ய மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து எக்மோர், மெரினா செல்லும் ரயில்களும், அதற்கு எதிர் திசையில் செல்லும் ரயில்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் குவிக்கப்பட்டு வருகின்றது.
Tags: Resistance Neet selection Students
<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>
*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!
*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்
*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!
*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!
*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!