நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்!
Share

{ kamalhassan answered question minister }
சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் விவசாய சங்கத்தினர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் கமல்ஹாசனுக்கு வீர வாள் ஒன்றை பரிசாக விவசாய சங்கத்தினர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
ரஜினியின் காலா திரைப்படத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். விவசாயிகளுக்கு தொடர்ந்து உறுதுணையாக கமல்ஹாசன் இருப்பார் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேற்று முன்தினம் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக இது தமிழகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
பல்வேறு விவசாய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் கமல்ஹாசன் தமக்கு ஆதரவாக உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
Tags; kamalhassan answered question minister
<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>
*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ
*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!
*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்
*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!
*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!
*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!