நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
Share

{ Suicide jumping 8 floor student }
நாடு முழுவதிலும் மருத்துவ படிப்புக்காக நடந்து முடிந்த நீட் தேர்வின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியதை தொடர்ந்து பல மாணவர்கள் இது தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
சிலரின் பெறுபேறுகள் அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி செல்ல உதவியதோடு, சிலரின் பெறுபேறுகள் அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் டெல்லி மாணவன் ஒருவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். டெல்லியின் துவாரகா செக்டார் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அவர், தரையில் வீழ்ந்து இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 வருடமாக நீட் தேர்வை இந்த மாணவன் எழுதியதாகவும், நேற்று வெளியான தேர்வில் தோல்வியடைந்ததை குறித்து இம்மாணவன் இம் முடிவை எடுத்துள்ளான் என தெரியவந்துள்ளது.
மாணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், நீட் தேர்வு முடிவு குறித்து தாம் பெற்றோரிடம் பொய் கூறியதாக குறிப்பிட்டுள்ளான். மேலும் மாணவன் பர்னவின் அறையில், முடிச்சி போடப்பட்ட துப்பட்டா இருந்ததும் தெரியவந்துள்ளது.
Tags: Suicide jumping 8 floor student
<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள்>>
*பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!
*மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?
*காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
*‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!