கர்நாடகா காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் திடீர் ராஜினாமா! காரணம் என்ன?
Share

(karnataka kangrass job resign )
சில நாட்களுக்கு முன்னர் , நடந்து முடிந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் வடக்கு கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் கட்சி கடும் சரிவை சந்தித்ததால் கர்நாடக வடக்கு காங்கிரஸ் செயல் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்ததன் முதற் காரணம், கர்நாடக தேர்தலில் லிங்காயத் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு கர்நாடகாவில் உள்ள பெலாகவி, பாகல்கோட், விஜயபுரா, கடாக் மற்றும் தார்வாத் ஆகிய 5 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியால் மொத்தமாக 8 சீட்டுக்களையே பெற முடிந்துள்ளது.
அடுத்ததாக , தேர்தலில் கிடைத்த இந்த கடும் தோல்விக்கு பொறுப்பேற்றுதான் ராஜினாமா செய்துள்ளதாக எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தால் யாருடைய தயவும் இல்லாமலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கலாம் என்று அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
எனினும், ம.ஜ.தவினர் காங்கிரஸ் கட்சியினை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படத்தொடங்கியிருப்பதனாலும், ம.ஜ.தவுடன் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய கூட்டணியை பிடிக்காமலுமே பாட்டீல் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.
மேலும் , இது தொடர்பாக கர்நாடக மாநில பாஜக கட்சி, காங்கிரஸ் – ம.ஜ.த கட்சிகளின் அதிகார வேட்கையின் அழிவுக்கு இது ஒரு ஆரம்பம் என்று தெரிவித்துள்ளது.
மற்றும் , சித்தராமையா தலைமையிலான முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை, உள்கட்டமைப்பு அமைச்சராக இருந்தவர் பாட்டீல், இவர் ஜூன் 2012 முதல் மே 2013 வரை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
tags;-karnataka kangrass job resign
More Tamil News
- காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!
- ‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!
- மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர் – தமிழன்டா!
- சிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது!