- இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில், பெண் காவலர் உயிரிழப்பு!
- இறால் பண்ணை தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் கொள்ளை!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் ஒப்படைப்பு!
- பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரிகளில் நிபா வைரஸ் இல்லை – கால்நடைப் பராமரிப்புத் துறை!
- தன் தந்தையிடம் ஆசி பெற்றேன் – மு.க. ஸ்டாலின்!
இடி தாக்கியதில் வரலாற்று சிறப்புமிக்க சந்திரகிரி கோட்டை கோபுரம் சேதம்!
Share

historic Chandragiri Fort Tower Damage Thunder hit
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சந்திரகிரியில் உள்ளிட்ட மாபெரும் மன்னர்கள், பேரரசர்கள் ஆட்சி புரிந்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையான ராஜா மஹால் கோட்டை மீது இடி தாக்கியதில் கோபுரம் சேதமடைந்துள்ளது.
மேலும் கோட்டை முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இயற்கை சீற்றத்திலிருந்து கோட்டையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தொல்லியல் துறை எடுக்காதே இடிதாக்கி கோட்டையின் கோபுரம் சேதம் அடைந்து இருப்பதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயரமான கட்டிடங்கள் கோபுரங்கள் மற்றும் மரங்களின் மீது தொடர்ந்து சமீபகாலமாக இடி தாக்கி சேதமடைந்தது பல உயிர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க சந்திரகிரி கோட்டைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபுரத்தின்மீது இடி தாக்கி பொருத்தியிருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பணியில் அலட்சியமாக இருந்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்திரகிரி கோட்டையை காப்பாற்ற முடியாத தொல்லியல் துறை அதிகாரிகள் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலை பாதுகாப்பு காரணங்கள் காட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைப்பது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதே நிலையே நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தொல்லியல் துறை எக்காரணத்தை கொண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலை பெறக்கூடாது தற்பொழுது உள்ளது போன்றே திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும், தொல்லியல் துறையின் கீழ் உள்ள பழங்கால கோபுரங்கள் கட்டிடங்களை முதலில் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
More Tamil News