- இறால் பண்ணை தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் கொள்ளை!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் ஒப்படைப்பு!
- பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரிகளில் நிபா வைரஸ் இல்லை – கால்நடைப் பராமரிப்புத் துறை!
- தன் தந்தையிடம் ஆசி பெற்றேன் – மு.க. ஸ்டாலின்!
- இனி விருப்பம்போல் காவிரியை திறந்துவிட முடியாது – கர்நாடகா!
- டாஸ்மாக் மதுக்கூடத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது!
இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில், பெண் காவலர் உயிரிழப்பு!
Share

female car crash car accident pondy
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில், பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
கூனிச்சம்பட்டைச் சேர்ந்த பூங்குழலி, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இன்று வழக்கம்போல அவர் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். பத்துக்கண்ணு என்ற இடத்தை கடந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதிவிட்டு மாயமானது.
இதில் தூக்கிவீசப்பட்ட பூங்குழலி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார், காவலர் பூங்குழலியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஹெல்மெட்டை சரியாக பொருத்தாததால், பூங்குழலி தலையில் பலத்த அடிபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
More Tamil News