குடிநீரை விலைக்கு வாங்கும் கிராம மக்கள் – விநியோகம் தடை!
Share

ஆர்.எஸ். மங்கலம் அருகே பல மாதங்களாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. villagers buy drinking water – supply barrier
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புல்லமடை ஊராட்சியைச் சேர்ந்த அன்னை நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ஒன்றியம் சார்பில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த பல மாதங்களாகவே குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தினமும் டேங்கர் வண்டிகளில் வரும் தண்ணீரை குடம் ரூ.5லிருந்து 10 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இவ்வாறு பணம் கொடுத்து குடிநீர் வாங்குவதால் நாளொன்றுக்கு சுமார் ரூ.200 வரை குடிநீருக்காக செலவு செய்ய வேண்டி உள்ளது. கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் பலரும் விலை கொடுத்து வாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தடைபட்டுள்ள குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More Tamil News
- சீர்காழி அருகே கடலில் வலையில் சிக்கும் அரியவகை கருவன்ட் இறால்!
- போலீஸாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!
- கிரானைட் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கருத்தரங்கு!
- கிணற்றில் வெடிமருந்து வெடித்து சிதறி விபத்து – 3 பேர் பலி!
- ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு!