தூத்துக்குடி முடிந்தது! போகலாமா இப்போது சேலம்! – போராட்ட மக்கள்…!
Share

thoothukudi ended! go now salam! – fight people
சேலம் எருமாப்பாளையத்தில் சாயத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீராலும், புகையாலும் அப்பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சேலம் எருமாப்பாளையத்தில் அர்த்தநாரி லூம் சென்டர் டெக்ஸ்டைல்ஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து திறந்துவிடப்படும் நச்சுத் தன்மை வாய்ந்த சாயக் கழிவுநீரால் ஏரி நீர் நச்சுத்தன்மை அடைந்ததுடன் இப்பகுதி நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது என்பது அங்கு வசிக்கும் மக்களின் புகார். இதனால் விவசாயக் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மாசுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள நச்சுப் பொருட்கள் பனித்துளிபோன்றும் எண்ணெய்ப் பிசுக்குப் போன்றும் வீடுகளின்மீதும் மரங்களின் இலைகள் மீதும் படிந்து இலைகள் காய்ந்து கருகிப் போய் உள்ளன என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர். அர்த்தநாரி லூம் சென்டர் டெக்ஸ்டைல்ஸ் என்னும் தனியார் நிறுவன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட புகையைச் சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலையில் கழிவுநீரிலும், புகையிலும் நச்சுக் கழிவுகள் கலந்துள்ளது குறித்து மாவட்ட ஆட்சியருக்குப் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அர்த்தநாரி லூம் சென்டர் டெக்ஸ்டைல்ஸ் ஆலையின் கழிவுகளால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவுநீர், நச்சுப் புகை வெளியேற்றப்படுவது குறித்து அவர்கள் தரப்பு விளக்கம் கேட்கச் சென்ற செய்தியாளருக்கு முறையாகப் பதிலளிக்காமல் வெளியே செல்லுமாறு அங்கிருந்தவர்கள் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.
இந்நிலையில் எருமாப்பாளையம் மட்டுமல்லாமல், குகை, சீலநாயக்கன்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சுத்திகரிக்கப்படாத நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More Tamil News
- ஏ.பி.நகரில் பட்டா நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு!
- கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!
- நெல்லை மீனவர்கள் பத்தாவது நாளாக வேலை நிறுத்தம்!
- குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பு 37 ஆக உயர்வு!
- மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
- 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி!