என்ன நாங்கள் சமூக விரோதிகளா? – தூத்துக்குடி மக்கள் வருத்தம்!
Share

தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய எங்களை ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என்று கூறியது வருத்தமாக உள்ளது, என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். social enemies? – people Thoothukudi
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே போலீஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றார்.
இதனையடுத்து அவரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மக்கள் ரஜினியின் பேச்சால் மனமுடைந்துள்ளனர்.
இதுகுறித்து துப்பாக்கிச் சுட்டில் காயமடைந்த மக்கள் கூறியதாவது :
மருத்துவமனைக்கு வந்து சிரித்து சிரித்து பேசிவிட்டு வெளியே சென்று எங்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியிருப்பது வருத்தமாக உள்ளது. அவர் மட்டும் பேட்டி கொடுத்து விட்டு வந்து எங்களை சந்தித்திருந்தால் அவர் கொடுத்த பணத்தை தொட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டோம். அவர் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். உரிமைக்காக போராடுபவர்கள் சமூக விரோதிகளாகிவிட்டோமா?. அவர் எங்களை அசிங்கப்படுத்திவிட்டார். எங்களை பற்றி இப்படி நினைப்பவர் மருத்துவமனைக்கே வந்திருக்கக் கூடாது. நாங்கள் குடும்பம், குடும்பமாக போராடினோம். நாங்கள் சமூக விரோதிகள் அல்ல என்று தூத்துக்குடி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- ரஜினி மக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்!
- நடிகர் ரஜினி மீது சீமான் பாய்ச்சல்!
- திமுக பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை – துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!
- ரஜினிகாந்த் கட்அவுட்டுக்கு பால் ஊத்தாதீங்க – பால் முகவர்கள் வேண்டுகோள்!
- டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிராக்கள் – தமிழக அரசு நடவடிக்கை!