5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி!
Share

bodies5 persons handed relatives – collector Sandeep Nanduri
தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் 7 பேரின் உடல்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மறு உடற்கூறாய்வு நேற்று செய்யப்பட்டது. உடற்கூறாய்வு செய்த 7 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
மேலும் 2 பேரின் உடல்கள் இன்று மாலை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் மூலம் பேசி தீர்க்கப்படும் என்று கூறினார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதி திருப்பியுள்ளதால் 100 சதவீதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.
More Tamil News
- துப்பாக்கிச் சூட்டில் பலியான பேய்க்குளம் தொழிலாளி உடல் அடக்கம்!
- ரஜினிகாந்த் பா.ஜ.க பினாமி – சி.ஐ.டி.யு சவுந்திரராஜன் தாக்கு!
- ரஜினியை யார் நீங்க என்று கேள்வி எழுப்பிய தூத்துக்குடி இளைஞர் விளக்கம்!
- குடிநீரை விலைக்கு வாங்கும் கிராம மக்கள் – விநியோகம் தடை!
- சீர்காழி அருகே கடலில் வலையில் சிக்கும் அரியவகை கருவன்ட் இறால்!