ரஜினிகாந்த் கட்அவுட்டுக்கு பால் ஊத்தாதீங்க – பால் முகவர்கள் வேண்டுகோள்!
Share

Rajnikanth’s Cutout – Heal Milk – Request milk agents
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் “காலா”, இத்திரைப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் அவரது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் வேண்டுகோள் விடுத்தது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயில், மழை, புயல், வெள்ளம், பனி என அனைத்தையும் சகித்துக்கொண்டு உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றி உழைத்து வருகின்றோம்.
தங்களைப் போன்ற முன்னணி நடிகர்கள் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் வெறித் தனமான அன்பின் காரணமாக அவர்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். இதற்காக நள்ளிரவில் கடைகளின் வாயிலில் வைத்துச் செல்லும் பாலை திருடிச் சென்று விடுகின்றனர்.
இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தால் உங்கள் பொருட்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கைவிரித்து விடுகின்றனர். இதன் காரணமாக பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் சில ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து கை கால்களை உடைத்துக்கொள்வதும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு அதனை நீங்களும் அறிவீர்கள். இதனை நீங்கள் மனது வைத்தால் தடுக்க முடியும். உயிரற்ற கட்-அவுட்களுக்கு பாலை ஊற்றி வீணடிக்கக்கூடாது. இதற்கு பதில் கண்தானம், உடலுறுப்பு தானம், மது, சிகரெட் , போன்றவற்றில் இருந்து விடுபட முகாம்களை நடத்தலாம். இதுகுறித்து திரையரங்க வாசலில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். என்பது குறித்து கோரிக்கை முன் வைக்கவிருந்தோம்.
இது குறித்து தங்களுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுதாகர், சத்யநாராயணா ஆகியோரை நேரில் சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தோம். இது தொடர்பாக உங்களிடம் விரைவாக தெரிவிப்பதாக தெரிவித்தனர். ஆனால் எங்களது கோரிக்கை உங்களின் கவனத்திற்கு வந்ததா எனத் தெரியவில்லை.
தற்போது தங்களின் படம் வெளிவரவிருப்பத்தால் மீண்டும் ஒருமுறை எங்களின் கோரிக்கையை தெரிவித்துக் கொள்கின்றோம். கட்அவுட்டில் பாலபிஷேகம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்கள் ஆக்கப் பூர்வமான பணிகளை பெற முயற்சி எடுப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Tamil News
- டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிராக்கள் – தமிழக அரசு நடவடிக்கை!
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக இஃப்தார் விருந்து – விராக் பச்போரே!
- மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை – அர்விந்த் கெஜ்ரிவால்!
- கேரளா – செங்கனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அமோக வெற்றி!
- உலக புகையிலை எதிர்ப்பு தினம் – எழும்புக்கூடு உடை அணிந்து விழிப்புணர்வு!
- 63 வயது மூதாட்டிக்கு பிறந்துள்ள பெண் குழந்தை!
- 532 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ள பாஜக!