சென்னையில் பைனான்சியரை கடத்தி கொள்ளை – 5 பேர் கைது!
Share

சென்னை வடபழனியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகன் என்பவரிடம், வங்கிக்கடன் பெற்றுத்தரும் தரகர் என கூறிய சரவணனன் என்பவர் அறிமுகமானார். 5 persons arrested kidnapping financier Chennai
இதனைத்தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பெரும் தொகை கடன் தேவைப்படுவதாகவும், அதிக வட்டி கிடைக்கும் என்றும் சரவணன் பைனான்ஸியர் மோகனிடம் ஆசை காட்டினார். இதை நம்பிய மோகன், மற்றும் அவரது மருமகன் மாணிக்கம், சரவணனுடன் காரில் அங்கு சென்றனர். தாம்பரம் அருகே சரவணனின் கூட்டாளிகள் 2 பேர் காரில் ஏறியவுடன், கத்தி முனையில் இருவரையும் கடத்தினர். மிரட்டலை அடுத்து, 33 லட்சம் ரூபாய் பணம் கடத்தல்காரர்களின் மற்றொரு கூட்டாளியிடம் கோயம்பேட்டில் தரப்பட்டது.
பின்னர், இருவரும் அணிந்திருந்த 28 சவரன் நகைகள், செல்போனையும் பறித்துக் கொண்டு செங்கல்பட்டு அருகே இறக்கிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த தனிப்படை போலீஸார், சுதிர்குமார், செல்வபாண்டி, ஷேக் தாவூத், நந்தகுமார், சீனிவாசா ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம், கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
More Tamil News
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- செல்போனில் இடிதாக்கி பெண் உயிரிழந்த சோக சம்பவம்!
- பரப்புரைக் குழுவின் வாகனத்தின் மீது பா.ஜ.கவினர் கல்வீச்சு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் – புதுச்சேரி!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!