Type to search

பாஜக அரசின் விளம்பர வெறிக்கு ரூ.5 ஆயிரம் கோடி அள்ளி இறைப்பு..!

INDIA India Top Story India Trending

பாஜக அரசின் விளம்பர வெறிக்கு ரூ.5 ஆயிரம் கோடி அள்ளி இறைப்பு..!

Share

மத்திய பாஜக அரசு, கடந்த 4 ஆண்டுகளில், விளம்பரத்திற்காக மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்து இருப்பது தெரியவந்துள்ளது.Rs-5000 crore BJP’s government india tamil news

மேலும், இது முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவிட்டதை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் வெளியாகியுள்ளது.

நொய்டாவைச் சேர்ந்தவர் ராம்வீர் தன்வார். இவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரத்திற்காக செலவழித்த தொகை எவ்வளவு? என்று அதில் கேட்டிருந்தார்.

அதற்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பதிலில், “கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 20180-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் மின்னணு ஊடக விளம்பரத்திற்காக ரூ. 2 ஆயிரத்து 208 கோடியும், அச்சு ஊடக விளம்பரத்திற்காக ரூ. 2 ஆயிரத்து 136 கோடியும், வெளிப்புற விளம்பரம் என்ற பெயரில் ரூ. 647 கோடியும் செலவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: