Type to search

இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி!

India Top Story India Trending Tamil nadu

இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி!

Share

திருப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர்.young man cell phone wrong clicking girls photos india tamil news

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிவராஜ். இவர் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் செவ்வாயன்று திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள குமார் நகர் பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற பெண்களை செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்நிலையில் அதே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சுமார் 23 வயது மதிக்கதக்க இளம் பெண்னை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இதையறிந்த அந்த பெண் அருகில் இருந்தவர்களிடம் கூறி உள்ளார். அவர் கூறியதை பார்த்த சிவராஜ் ஓட ஆரம்பித்தார்.

அருகில் இருந்தவர்கள் துரத்திப்பிடித்து சிவராஜின் செல்போனை பரிசோதித்ததில் அவர் பேருந்து நிறுத்ததில் இருந்த சில பெண்களை படம் எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்கள் சிவராஜை தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அந்த இடத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: