கோவில்பட்டியில் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் லாரி! – சாலையில் சிதறிய சிலிண்டர்கள்!
Share

மதுரையில் இருந்து நெல்லைக்கு கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, கோவில்பட்டி அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கிய லாரி டிரைவர் போராடி மீட்கப்பட்டார்.gas cylinder truck temple – scattered cylinders road india tamil news
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மதுரையில் உள்ள இன்டேன் கேஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று மதுரையில் இருந்து நெல்லைக்கு லாரியில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
இந்த லாரியில் 350 சிலிண்டர்கள் இருந்தன, லாரி, கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டினை இழந்த லாரி, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில், டிரைவர் ராஜ்குமார் லாரியின் அடியில் சிக்கி கொண்டார். லாரியில் இருந்த சிலிண்டர்களும் சிதறின.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து டிரைவர் ராஜ்குமாரை மீட்டனர். இதில், டிரைவர் காயமின்றி தப்பினார்.
மேலும், லாரியின் டீசல் டேங்கும் சேதமடைந்து , டீசல் வெளியேறிது, இதனால் தீ விபத்து ஏற்படமால் இருக்க தீயணைப்புத்துறையினர் சோப்பு நுரை ஊற்றி தடுத்தனர்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக, மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு சிலிண்டர்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.
இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி!
- கடலூர் சிறையில் ஆயுள் கைதி மர்ம மரணம்!
- சொத்து வரி உயர்வை கைவிடுக ஈரோட்டில் லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்!
- எம்.பி.க்கள் சம்பளம் ரூ.1,997 கோடி!
- வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது! – ஹெச்.ராஜா!
- பாலியல் தொல்லைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது! – மேனகா காந்தி!
- 103 வயதிலும் விளைநிலத்தில் உற்சாகமாக விவசாயம் செய்யும் அதிசய பாட்டி!
- திருமுருகன் காந்தி விடுதலையானதும் செய்த முதல் வேலை..!
- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை