Type to search

சொத்து வரி உயர்வை கைவிடுக ஈரோட்டில் லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்!

India Top Story India Trending Tamil nadu

சொத்து வரி உயர்வை கைவிடுக ஈரோட்டில் லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்!

Share

சொத்து வரி உயர்வைக் கைவிட வேண்டியும், வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தக்கோரியும் ஈரோட்டில் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது.not-drop property tax hike erode india tamil news

தமிழக அரசு, வீட்டுக்கு 50 சதவிகிதமும், கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு 100 சதவிகிதம் வரைசொத்து வரியை அதிரடியாக உயர்த்தி உள்ளது.

இதனை திரும்பப் பெறுவதுடன், சொத்து வரியுடன், குப்பை வரியை சேர்த்து வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

ஈரோடு மாநகரில் சேதமடைந்த சாலைகளை முழுமையாக சீரமைக்க வேண்டும். நீரேற்று நிலையங்களில் உள்ள பழுதை முழுமையாக நீக்கம் செய்து, சீரான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சுமார் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைகளை, பாதாள சாக்கடை திட்டத்துக்காக மீண்டும் தோண்டி அரசின் வருவாயை வீணடிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளின் சார்பில் லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்று முதல்வருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாயன்று துவங்கிய கையெழுத்து இயக்கத்தை ஈரோடு வரி செலுத்துவோர் சங்கச் செயலர் ந.பாரதி, துணைத் தலைவர் டி.ஏ.சண்முகசுந்தரம் மற்றம் வீட்டு உரிமையாளர், குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.

இதில், ஈரோடு துணி வணிக சங்கத்தலைவர் பி. ரவிச்சந்திரன், அனைத்து தொழில் வணிகர்சங்கப்பொருளாளர் துரைசாமி, குடியிருப்போர் சங்கங்களின் செயலர் ஆர்.சென்னியப்பன் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: