Type to search

குற்ற வழக்கில் சிறைக்கு சென்ற சமூக ஆர்வலர்களின் குழுந்தைகளை பாதுகாக்கும் பெண்மணி

INDIA India Trending

குற்ற வழக்கில் சிறைக்கு சென்ற சமூக ஆர்வலர்களின் குழுந்தைகளை பாதுகாக்கும் பெண்மணி

Share

குற்ற வழக்கில் சிறை சென்றவர்களின் குழுந்தைகளை பாதுகாப்பதற்காக விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் ஓடிசாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நீரஜா லஷ்மி மொஹபத்ரா.takecare woman protects children’s pediatrician prisoners jail criminal case

நீரஜா மொஹபத்ரா.. ஓடிசாவை சேர்ந்த சமூக ஆர்வலர்.சிறையில் உள்ள பெண்களுக்கு அவ்வப்பபோது கவுன்சிலிங் கொடுப்பவர்.

அப்படி ஒரு முறை சிறையில் ஒரு பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் போது அந்த பெண்ணின் குழுந்தைகள் அங்கே விளையாடுவதை பார்த்திருக்கிறார்.

ஏன் அவர்கள் வீட்டிற்கு போகவில்லையா என்று கேட்க ஒட்டுமொத்த குடும்பமே ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் இருப்பதாக அறிந்து கொள்கிறார்.

ஓடிசாவில் உள்ள சிறைச்சாலை சட்டதிட்டங்களின் படி கைதிகளின் குழந்தைகள் 5 வயது வரை அவர்களோடு சிறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவதால் பல குழந்தைகள் அங்கு இருப்பதாக கண்டறிகிறார்.

5 வயது வரை சரி. அதற்கு பிறகு அவர்களின் எதிர்காலம் என்ன என்பதை யோசிக்கும் போது தான் இவர்களுக்கான விடுதியை தொடங்க யோசனை வந்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு விடுதி திறக்கப்பட்டது. 2 குழந்தைகளோடு தொடங்கப்பட்டு இன்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்அங்கே இருக்கிறார்கள்.

இந்த விடுதியில் சேர்ந்த பிறகு இக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர். தொடக்க காலத்தில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இவர்களின் அடிப்படை வசதிகளுக்காக செலவழித்திருக்கிறார்.

ஆனால் தொடர்ந்து சமாளிக்க முடியாததால் தொண்டு நிறுனவங்களின் உதவியையும் நாடியிருக்கிறார்.சில தொண்டு நிறுவனங்கிளின் உதவியுடன் இப்போது விடுதியை நடத்தி வருகிறார்.

சாதாரண குழந்களை விட இந்த குழந்தைகளுக்காக அதிகிம் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன நீரஜா அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.

பெற்றோர்கள் இருவருமே குற்றவாளிகள் என்ற பட்சத்தில் குற்றவாளிகிளின் குழந்தைகள் என்று சமூகம் இவர்களை அடையாளப்படுத்துவதால் மிகுற்த மன அழுத்தத்திற்கு இக் குழந்தைகள் ஆளாகிறார்கள்.

இதற்காக தினமும் இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துமாறு பார்த்துக் கொள்கிறார்.

அதோடு பாட்டு,நடனம்,ஓவியம் போன்ற தனித்திறிமைகள் உள்ள குழந்தைகளையும் ஊக்குவிக்கிறார்.

இந்த குழந்தைகள் பெற்றோரை பார்க்க விரும்பினால் அவர்களை பரோலில் வரச்செய்து சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்கிறார்.

நெகிழ்வான இந்த தருணங்களை நினைவு கூறும் இப்பெற்றோர்கள், எங்கே என்னுடைய குழந்தைகளை இந்த சமூகம் புறந்தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை நீராஜா நீக்கியிருக்கிறார்.

இந்த தாய்க்கு என்றென்றும் நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு தாயாகவும் ஓட்டுமொத்த எதிர்காலமாகவும் திகழ்கிறார் நீரஜா மொஹபத்ரா.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like